சேலம் மாவட்டம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் வாழ வழியின்றி குடும்பத்துடன் சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உடனடி அனுமதி வேண்டி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 முறை கோரிக்கை மனுக்களை வழங்கியும், அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டிய மாற்றுத்திறனாளி தனது இரண்டு கைகளை இழந்ததால் வருமானம் இன்றி தவித்து வருவதாக வேதனை தெரிவித்தார். மேலும், கடந்த எட்டு ஆண்டுகளாக 17 முறை வழங்கிய மனுக்களை மாலையாக அணிவித்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தார். 



இதேபோன்று, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ஊராட்சி கொக்காங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி குமார் (40). இவர் தனது தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே , பகுதியை சேர்ந்த தங்கவேலு மற்றும் கொக்கடிவேலு ஆகியோர் உயர் சாதி பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் சாதி பாகுபாடு பார்த்து இவரது தோட்டத்திற்கு செல்லும் வழியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதாக குமார் குற்றம் சாட்டினார். இந்தநிலையில் குமார் தனது தாய் மாரியம்மாள், மற்றும் பள்ளிக்கு செல்லும் மகன் தரணீஷ், மகள் தர்சினி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு தங்கள் மீது மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு அனைவரும் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.


சென்னை: பெரம்பூரில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் பாதுகாப்பாக மீட்பு



கரூரில் போக்குவரத்து ஆய்வாளர் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் - வேன் ஓட்டுநர் தலைமறைவு


இதுகுறித்து குமார் கூறும்போது, தனது தோட்டத்திற்கு செல்லும் வழியில் தனக்கு சட்டரீதியாக பாத்திரம் இருந்தும், சாதி பாகுபாடு காரணமாக அதனை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக வேதனையுடன் தெரிவித்தார். பள்ளி சீருடையில் குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


வெள்ளத்தை தடுக்க SPONGE CITY CONSTRUCTION முறை - மத்திய, மாநில அரசுகள் பதில்தர நீதிமன்றம் உத்தரவு