கற்காலத்துக்கு முன் இருந்தே தருமபுரி மாவட்டத்தில் மனிதர்கள் வாழ்ந்தற்கான சான்றுகள் ஏரளமாக உள்ளன. மனித இனத்தின் பல்வேறு அசுர வளர்ச்சியால், பழங்கால நினைவு சின்னங்கள் அழிந்து வந்த போதும், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல வரலாற்று எச்சங்கள், இம்மாவட்டத்தின் பெருமையை மக்களுக்கு இன்றளவும் உணர்த்தி வருகிறது. குறிப்பாக, புதிய கற்காலத்தில் குறிப்பிட்ட சில நாடுகளில் வழிபாடு செய்யப்பட்டு வந்த, புதிர் நிலை கற்கள், தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டியில் இன்றளவும் அழியாமல் உள்ளன.
உலகிலேயே ஸ்காண்டிநோவியா நாட்டில் தான், அதிக புதிர் நிலைகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. அவை 300 மற்றும் 600 ஆண்டுகள் பழைமையானவை. கிரேக்கத்தில் பைலோஸ் என்ற இடத்தில் கிடைத்த சுடுமண் தட்டு ஒன்றில் வரையப்பட்டுள்ள சதுர புதிர் நிலை போன்ற புதிர்நிலை, தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டியில் 1,600 சதுர அடி பரப்பளவில் உலகத்திலே மிகவும் பெரியதாக உள்ளது. இது உலகின் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களை அதிசயிக்க வைத்துள்ளது.
புதிர் நிலை என்பது ஒரு பெண்ணின் வயிற்று பகுதியாகவும், அதன் வெளி பகுதி குழந்தை பிறக்கும் பகுதியாக மக்கள் கருதுகின்றனர். குழந்தைகள் சுகபிரசவமாக பிறக்கவும், அக்குழந்தை ஆரோக்கியமாக வளரவும் புதிர்நிலைகளை மக்கள் வழிபட்டு இருந்துள்ளனர். குறிப்பாக வெதரம்ப்பட்டி கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிர்நிலையை ஏழு சுற்று பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டு அங்கு பொங்கல் வைத்து அங்குள்ள கற்களுக்கு படையிட்டு வழிபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இதனால் ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்து பிறகு எட்டாவது நாளான நேற்று வெதரம்பட்டி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புதிர் நிலையின் அருகே பொங்கள் வைத்து அங்குள்ள கற்சிலைகளுக்கு படையிலிட்டு பூஜை செய்து, கோவிந்தா, கோவிந்தா என கூறி வணங்கினர். இதனை தொடர்ந்து ப குழந்தைகள் நலமுடன் இருக்கவும், நோய் இல்லாமல் வாழவும், ஏழு சுற்றுள்ள புதிர்நிலையை சுற்றி வந்து வணங்கினர். இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்று பெண்கள் விரத்தத்தை முடித்தனர். மேலும் பொங்கல் பண்டிகை நிறைவு விழாவாக கிராமத்தில் எருதாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கற்காலத்தை மறந்து வளர்ந்து வரும் இக்கால கட்டத்தில் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் வழக்கத்தினை இடைவிடாமல், கற்காலத்தை மறக்காமல் கற்காலத்தில் துவங்கிய வழிபாட்டு முறையை வெதரம்பட்டி மக்கள் காலம் காலமாக கடைபிடித்து வழிப்பட்டு வருகின்றனர்.