தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமா ர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த உமர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு வளர்ச்சி திட்டங்கள் குறித்து நிறைவேற்றப்பட்டுள்ளது பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயனடையும் வழியில் அதிகாரி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.
மத்திய, மாநில அரசுகள் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மேலும், தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கான வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு, அத்தகைய திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் (ஜல்ஜீவன் மிஷன்), பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், முதல்வரின் முகவரி, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதா இயக்கம், தமிழ்நாடு பைபர் நெட், கல்வித்துறையின் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (சமக்ரா சிக்ஷா), வனத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மீன்வளத்துறை, வேளாண்மைத்துறை, அளவை மற்றும் நில பதிவுத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், தமிழ்நாடு மின்சாரத்துறை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்திட்டம், நகராட்சி, இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் செயலாக்கம், முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் எடுத்துரைக்கப்பட்ட விவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.