தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மூர்த்தி என்பவர் தனது நண்பரருடன் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சாலையில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக திரும்பியுள்ளார்.

 




அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் இருந்து நகர்ப்புறம் நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மூர்த்தி மற்றும் அவருடன் வந்த நண்பர் ஸ்ரீராம்குமார் மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் என் ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து இந்த ஐந்து பேரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து  மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 


 

இந்நிலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்து மற்றொரு இருசக்கர வாகனம் மோதும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தொடர்ந்து நெஞ்சை பதற வைக்கும் விபத்து நடந்த காட்சிகள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, வண்டி எண்ணை வைத்து காவல் துறையினர் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 






தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டு குடும்பத்தினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

 



 

 

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டியை சேர்ந்த ஜெயா, சுமதி, விஜயலட்சுமி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தலா, 3 செண்ட் அரசு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ளனர். இந்நிலையில், ஜெயா, சுமதி, விஜயலட்சுமி இப்பகுதியில் வீடுகட்டும் பணியை துவங்கியுள்ளனர். அப்போது, ஜெயாவின் உறவினர்கள் அரசு வழங்கிய இடத்தில் தங்களுக்கு பங்கு வழங்க வேண்டும் என, நிர்பந்தம் செய்துள்ளார். இதுகுறித்து, ஜெயா உள்ளிட்டோர் கோட்டப்பட்டி காவல் நிஸைனய்தில்  புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், உறவினர்கள் ஜெயா குடும்பத்தினரிடம் தொடர்ந்து பங்கு கேட்டுள்ளனர். 

 



 

இதனால், விரக்தி அடைந்த ஜெயா, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தனது குடும்பத்தினருடன் வந்து உடலில், மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஜெயா, குமார், சுமதி, விஜயலட்சுமியை மீட்டு, விசாரணைக்காக தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.



 

இதே போல், தருமபுரி அடுத்த  நாகர்கூடல் அவ்வைநகரை சேர்ந்தவர் நாகவேணி என்பவர் கலப்பு திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து தந்தையின் நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும், நாகவேணியை, அவரது சித்தாப்பாக்கள் வீட்டை காலி செய்யும் படி மிரட்டியுள்ளனர். இதனால், விரக்தி அடைந்த  நாகவேணி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் பாதுகாப்பாக மீட்டு, தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு குடும்பத்தினர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.