சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் உடல் முழுவதும் செடிகொடிகளை கட்டிக்கொண்டு மரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை மாட்டிக்கொண்டு நூதனமுறையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் மரங்கள் நடவேண்டும் என்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அடுத்த தலைமுறையை காப்பாற்ற மர மரங்களை விட்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
சேலம் தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செஞ்சிறகுகள் உதவும் சங்கம் என்ற பெயரில் மரக்கன்றுகள் நடுவது, மரங்களை பாதுகாப்பது குறித்து பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மரங்கள் நடுதல், மரங்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு விழிப்புணர்வு உரையாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேபோன்று சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள சூரப்பள்ளி கிராமம் சேவியூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர். அந்த இடம் வேறுநபர்பளுக்கு கைமாறியதால் இறுதியாக அந்த நிலத்தை வாங்கிய மாணிக்கம் என்பவர் தனது நிலத்தில் யாரும் நுழையக்கூடாது என்று கூறியதுடன், பொக்லின் இயந்திரம் கொண்டு குழி வெட்டி சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும் பொழுது எங்கள் சேவியூர் காட்டுவளவு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றோம் இந்த நிலையில் தாங்கள் பயன்படுத்தி வந்த பாதை பட்டா நிலமாக இருந்தாலும் அதே ஊரைச் சார்ந்த குழந்தை சாமியின் என்பவர் எங்கள் பயன்பாட்டிற்காக நடைபாதை ஒதுக்கி தந்தார்.
இந்த நிலையில் குழந்தை சாமியிடம் இருந்து அந்த நிலத்தை வாங்கிய அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் எங்களை நடக்க விடாமல் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி சிரமத்தை ஏற்படுத்தி வருகிறார். இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள் அவதியுற்று வருகின்றார்கள். எங்கள் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூட பாதை இல்லாமல் அவதியுற்று வருகின்றோம். எனவே நடைபாதியை ஆக்கிரமித்து மாணிக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீண்டும் அந்த பாதையை எங்களுக்கு சீரமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க வந்ததாக கூறினார்.