பண்டைய காலத்தில் கிராமங்களில் ஆங்காங்கே எங்கு பார்த்தாலும் குளங்கள், ஏரிகள், கிணறுகளில் தண்ணீர் நிரம்பி இருந்து வந்தது. அங்கு அப்பகுதியில் உள்ளவர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழ்வர். அதிலும் இயற்க்கை சூழல் அமைந்துள்ள இத்தகைய நீர்நிலைகளில் குளிப்பதால், எந்தவித நோய்நொடிகளின்றி வாழ்ந்தனர். காலப்போக்கில் கிராமங்களில் இருந்தவர்கள் நமது பண்பாடு கலாச்சாரத்தை தொலைத்து நகர வாழ்க்கையில் மூழ்கியதால், குளிக்க குளங்கள் ஏரிகளை மறந்து ஒரு பக்கெட் தண்ணீரில் குளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் நம் முன்னோர்களின் மரபு வழி வந்த ஆரோக்கியமான வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தருமபுரி அடுத்த பூகாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து இயற்கையாக அமைந்த கரையான் புற்று மண்ணை கொண்டு வந்து பவுடராக்கி அதில் சோற்று கற்றாலை, மருதாணி, வேப்பிலை, எழுமிச்சம் பழம், குப்பைமேனி, செம்பருத்தி இலை போன்ற இயற்கை மூலிகை பொருட்களை தனிதனியாக அரைத்து ஒவ்வொன்றாக புற்று மண்ணுடன் சேர்த்து கலந்து உடலில் பூசிக்கொண்டு சிறிது நேரம் சூரியஒளியில் இருந்த பிறகு குளித்தனர்.
மேலும் நோயற்ற வளமான வாழ்க்கைக்கு வாழ, மண் குளியல் ஈடுப்படுவதால் கோடைக் காலங்களில் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள், நிரந்தரமாக தீரும், உடல் வெப்பத்தை தனிக்கும் எனவும், எதிர் வரும் காலங்களில் மறந்த பாரம்பரியத்தை பள்ளி மாணவர்கள் மூலம் மண் குளியல் முறையை மீட்டெடுக்கும் முயற்சியில் அங்குள்ள இளைஞர்களும், மாணவர்களும் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்கள் மூலம் மண் குளியல் முறையை பெற்றோர்களுக்கு தெரிவித்து அவர்களும் மண் குளியல் ஈடுபட வேண்டும் என கிராமத்தின் இளைஞர்களின் இந்த முயற்சி பொதுமக்களிடம் வரவேற்ப்பையும், பாராட்டையும் ஏற்படுத்தி உள்ளது.