தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தும்பலஹள்ளி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் 2817 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன வெளியேறும் உபரி நீரின் மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு பிறகு போதிய மழை இல்லாததாலும் உயிர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால், சின்னாறு அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் 5 மாதம் வெளியேறி வந்தது. இதனால் அணைக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு தும்பலஹள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழுவதும் நிரம்பி, உபரிநீர் சுமார் வெளியேறியது. இதனால் தும்பலஹள்ளி அணையின் பாசன ஏரிகள் முழுவதும் நிரம்பி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு சென்றது.



 

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தும்பலஹள்ளி அணையிலகருந்து விவசாய பாசனத்திற்கு 35 நாட்களுக்கு வினாடிக்கு 48 கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி திறந்து வைத்து மலர் தூவினார். இதன் மூலம் கொட்டுமாரணஹள்ளி, நாகனம்பட்டி, கெரகோடஹள்ளி, காரிமங்கலம், அடிலம் கிராம த்தில் உள்ள 2184 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு மாதமாக வரலாறு காணாத அளவிற்கு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகள் முழுவதும் நிரம்பி, தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து வீணாக கடலுக்குச் சென்றது. தற்போது வரை இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் முழுவதும் நிரம்பி இருக்கிறது. இப்பொழுது தண்ணீர் திறக்கப்பட்டதால், மீண்டும் இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து கடலுக்குச் செல்லும் நிலை தான் இருந்து வருகிறது. ஆனால் தண்ணீரை திறக்காமல் அணையில் தேக்கி வைத்திருந்தால், இன்னும் ஓராண்டிற்கு இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மேட்டு நிலங்களுக்கு தேவையான தண்ணீர் வசதி கிடைக்கும். ஆனால் தற்பொழுது தண்ணீர் திறக்கப்பட்டதால், முழுவதும் வெளியேறிவிடும். இதனால் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.



 

இதுகுறித்து அணை உதவி செயற்பொறியாளர் மோகனப்ரியாவிடம் கேட்டபோது, “துமாபலஹள்ளி அணை வட்டார பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. ஆனால் விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, அதில் நாகனம்பட்டி, காரிமங்கலம், கொட்டுமாரனள்ளி, அடிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதின் அடிப்படையில், தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள 2184 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும். அதே போல் இந்த பகுதிகளுக்கு தண்ணீர் நிரம்பியுடன் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்படும்” என தெரிவித்தார்.