தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 40 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதம் நல்ல மழை பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது பெரும்பாலான மாரண்டஹள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.



 

கடந்த மாதம் முள்ளங்கி வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து கிலோ ரூ.8-க்கு  விற்பனையானது. மேலும்  விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.3, 4 என, அடிமட்ட விலைக்கே வாங்கிச் சென்றனர். இதனால் அறுவடை செய்யும் கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தற்போது தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் அதிகமாக இருந்தாலும் வெளியூருக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் முள்ளங்கி விலை கடந் மூன்று மாதங்களுக்கு பிறகு, கிலோ ரூ.20 என ஏற்றம் கண்டுள்ளது. மேலும் வெளி மார்க்கெட்டில் ரூ.30 வரை விற்பனையாகிறது. மேலும் மூன்று மாதங்களுக்கு பின் முள்ளங்கி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 



 

தருமபுரி அருகே கிராமத்தில் இருந்த பொது கிணற்றை இடித்து விட்டு, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

 



 

 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டாநூலஹள்ளி கிராமத்தின் குடியிருப்புகளுக்கு மத்தியில் பொது கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த பொது கிணறு பயன்பாட்டில் இல்லாததால், பொது கிணறு அருகில் உள்ள கலையரசி என்பவர் பொது கிணறை இடித்து தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் சிமெண்ட் தரை தளம் அமைத்து தனது வீட்டிற்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அடுத்து கிராமத்தில் உள்ள பொது கிணற்றை இடித்து தரைமட்டமாக்கி ஆக்கிரமிப்பு செய்துள்ள கலையரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கடந்த மே மாதம் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் மிட்டாநூலஹள்ளி கிராமத்திற்கு வந்து, ஆக்கிரமிப்பு செய்த பொது கிணறு அமைந்துள்ள இடத்தை அளவீடு செய்து, நான்கு புறமும் எல்லை கற்களை நட்டு வைத்துள்ளனர்.

 

 

ஆனால் அப்பொழுது அதிகாரிகளை அளவீடு செய்யாமல், பொதுமக்களையும், அதிகாரிகளையும் கலையரசி தகாத வார்த்தைகளால் பேசி உள்ளார். இந்நிலையில் அதிகாரிகள் அளவீடு செய்து விட்டு போன பிறகு மீண்டும் அந்த எல்லைக் கற்களை புடுங்கி வீசிவிட்டு, அந்த இடத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் அளவீடு செய்து நான்கு மாத காலமாகியும், ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் ஒன்றிணைந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் அதிகாரிகளையும், பொதுமக்களையும் தரக்குறைவாக பேசி, அரசுக்கு சொந்தமான இடத்தில் அளவீடு செய்த எல்லை கற்களை பிடுங்கி எரிந்து விட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள கலையரசி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தினார்.