தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அரக்காசனல்லி கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலம் இருந்துள்ளது. இதில் 30 ஏக்கர் நிலத்தினை பொதுமக்கள் பயன்படுத்த ஏலம் விடப்பட்டுள்ளது. நாள் மிதமிருந்த 10 ஏக்கர் தரிசு நிலம் இருந்து வருகிறது. இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து முறைகேடாக நிலத்தை ஓட்டுவதற்காக குறுக்கு வழியில் ஆவணங்களை பெற்று நான்கு பேர் பயன்படுத்தி வருகின்றனர்.


இந்த கோயில் நிலத்தை பொதுமக்கள் மத்தியில் ஏலம் விட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் சிலர் பென்னாகரம் வட்டாட்சியர் மூலமாக குறுக்கு வழியில் ஆவணங்களை பெற்று நிலத்தை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கிராமத்தில் இருந்து பல்வேறு சமூகத்தைச் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளிக்க வந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசாரணை செய்ய அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கிராம மக்களிடையே விசாரணை நடத்தியுள்ளார். அப்பொழுது இந்த கோயில் நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதால், இதில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். அப்பொழுது தங்களது நிலத்தை மீட்டுத் தரவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அரசிடமே ஒப்படைக்க போகிறோம் என தெரிவித்துள்ளனர்.




இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா ஆவணங்களை எங்கே ஒன்று, வீசி விட்டுச் செல்லுங்கள், நாங்கள் எதுவும் பண்ண முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குடும்ப அட்டை மற்றும் ஆதார் கேட்பர்ற்று கிடக்கிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வீசி விட்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.