தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளி கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.

 

தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஏலத்தில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 433  விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் 1120பருத்தி மூட்டை ரூ.72 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில், எம்.சி.எச்., ரகம் குவிண்டால், 6,066 முதல், 6,709ரூபாய் வரை விற்பனையானது. மேலும் கடந்த வாரம் ரூ.76 இலட்சத்திற்கு விற்பனையான நிலையில், கடந்த வாரத்தை விட, பருத்தி வரத்து குறைந்தது‌. ஆனால் விலை சற்று உயர்ந்து விற்பனையானது. மேலும் வரும் வாரங்களில் பருத்தி வரத்து குறைய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.



 

இதேபோல் அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் eNAM (மின்னணு தேசிய வேளாண் சந்தை)  நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1900 மூட்டை பருத்தி ரூ.50 இலட்சத்திற்கு ஏலம் போனது. இதில் பருத்தி விலை 5,686 முதல் 6,850 விற்பனையானது மேலும் கொட்டு பருத்தி விலை 3,009 முதல் 4900 வரை விற்பனையானது. மேலும் கடந்த சில வாரங்களாக அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பருத்தி விற்பனைக்காக விவசாயிகள் அதிக அளவில் எடுத்து வருகின்றனர். அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் eNAM என்றகிற தேசிய மின்னணு சந்தை மூலம் பருத்தி ஏலம் நடைபெறுவதால், விலைகளின் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதனால் வேலன் உற்பத்தியாளர்கள் விற்பனை கடன் சங்கத்திற்கு பருத்தி ஏலத்திற்கு எடுத்து வரும் விவசாயிகளின் எண்ணிக்க சரிய தொடங்கியுள்ளது.

 

மேலும், அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.50 இலட்சத்திற்கும், கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கடன் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.72 இலட்சம் என மொத்தம் ரூ.1.22 கோடிக்கு பருத்தி விற்பனையானது. மேலும் கடந்த வாரத்தை விட பருத்தி வரத்து குறைந்திருந்தது. ஆனால் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்து விற்பனையானது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண