மொரப்பூர், திப்பிரெட்டிஹள்ளி இருவேறு ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தருமபுரி ஊராட்சி ஒன்றியம் திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா,  பதவியேற்ற நாள் முதல் இன்று வரை 32 மாதங்களாக ஊராட்சி வரவு, செலவு கணக்குகள் காட்டாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே வழங்கியுள்ளனர். ஆனால்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக 8 வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகளை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என மனு கொடுத்தும்  இதுவரை  நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ஊழல் செய்வதில் மட்டுமே குறியாக உள்ளார். 

 

ஆனால் மக்களுக்கு எந்த பணிகளும் செய்யாமல், பணிகள் செய்ததாக மின் மோட்டார் வாங்கியதாகவும், தெருவிளக்கு அமைத்ததாகவும், பொய்யாக பல்வேறு வகையில் கணக்கு எழுதி பணம் எடுத்துள்ளார். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை தெரிய வரும். ஆகவே ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய விசாரணை செய்து அதற்கு உடந்தையாக செயல்பட்ட ஊராட்சி செயலாளர் கந்தசாமி மீது ஊராட்சி விதிகளின்படி தகுதி நீக்கம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஸ்வினி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்தனர்.



 

இதனை தொடர்ந்து திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று  மொரப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் எந்த வித ஆவணங்கள் இன்றியும் ஊராட்சி மன்ற நிதியில் சுமார் 9 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ஊராட்சி மன்ற துணைத்தலைவர், மற்றும் மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும்  முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்  என்னிடம் பண பரிமாற்றும் நகல் எடுத்து கையொப்பம் இட  சொல்லி வழங்கி உள்ளார். இந்த ஊழல் முறை கேட்டில் துப்புரவு பணியாளர் பெயரிலும், ஊராட்சி செயலாளர் மற்றும் கடைகள் பெயரில் பணம் எடுத்து முறைகேடு செய்ததாகவும், ஊராட்சி செயலரிடம் செலவின விவரம் கேட்டால் எனக்கு ஏதும் தெரியாது என பதில் கூறுவதாகவும், ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டால், வழக்கு தொடர போவதாக மிரட்டுகிறார் என துணைத்தலைவர் புகார் தெரிவிக்கின்றார். ஆகவே முறை கேட்டில் ஈடுபட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மொரப்பூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோதா மற்றும் உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.