மாரண்டஅள்ளி அருகே தனியார் பால் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து இருப்பதாக தண்ணீருடன் கிராம மக்கள் சட்டமன்ற குழுவினரிடம் புகார் அளித்தனர்.


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் தருமபுரி மாவட்டத்தில், குழு தலைவர் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன் தலைமையில், குழு உறுப்பினர்கள்  மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் / லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன் தலைமையில் குழு உறுப்பினர்களான மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது , திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். தி.சதன் திருமலைக்குமார் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன்  ஆகியோர் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுவினர் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஓகேனக்கல்லில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தினை துவக்கி வைத்தார்கள். இதனை தொடர்ந்து, பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி ஹட்சன் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவின் செயல்பாடுகள் குறித்தும், சுத்திகரிப்பு ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.




பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தணிக்கை பத்திகள் மற்றும் தன் ஆய்வு குறித்து மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான கோரிக்கை மனுக்களை வழங்கினார். அப்பொழுது மாரண்டஅள்ளி அருகே உள்ள தனியார் பால் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மாசு கலந்த தண்ணீரை குழுவினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசவிக்கும் மானிய கடன் உள்ளிட்டவற்ற வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் வளர்ச்சிகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை இக்குழுவினர் வழங்கினர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் தீபனாவிஸ்வேஸ்வரி, சட்டமன்ற உறுப்பினர்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.