பாலக்கோட்டில் வயல்வெளிக்குள் புகும் யானைகள் - கால் தடங்களை பார்த்து விவசாயிகள் அச்சம்

’’பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால், யானையை விரட்டவோ, ரோந்து பணிக்கு வந்து செல்வதறாகாக போதுான ஊழியர்கள் இல்லை என கூறுவதாக வேதனை’’

Continues below advertisement
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கெசர்குழி வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் காட்டு யானையானது பேவுஅள்ளி, கரகூர், சொக்கன் கொட்டாய், ஈச்சம்பள்ளம், காடையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு தற்போது அறுவடைக்கு தயாராகி வரும், நெல், கரும்பு, அவரை, துவரை, போன்ற விளைப்பயிர்களை  உண்பதோடு, வயல்வெளிகளை மிதித்தும் சேதப்படுத்தி வருவதால், பெருத்த இழப்பு ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
 

 
காட்டு யனையின் நடமாட்டத்தை கட்டுபடுத்த கோரி சம்மந்தபட்ட பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால், யானையை விரட்டவோ, ரோந்து பணிக்கு வந்து செல்வதறாகாக போதுான ஊழியர்கள் இல்லை ஒன்றும் செய்ய முடியாத என தெரிவித்து வருவதால், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காட்டு யானையின் அட்டகாசம் என்பது நாளுக்கு அதிகரித்து வருகிறது என்கின்றனர் பாதிக்கபட்ட விவசாயிகள்.
 

 
மாலை மங்கி இருள் சூழ தொடங்கியதும் வனத்திலிருந்து வெளியே வந்துவிடும் காட்டு யானை பபிர்களை உண்டு தீர்த்துவிட்டு விடியற்காலை நேரத்தில் மீண்டும் வனத்திற்குள் திரும்பி விடுகிறது. காட்டு யானையின் அட்டகாசத்தை கட்டுபடுத்த முடியவில்லை என்றும், வீடுகளில் நிம்மதியாக உறங்கவும் முடியவில்லை என விவசாயிகள் வேதனையைட்நுத்ள்ளனர். எனவே அறுவடைக்கு தயாராகவுள்ள பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானையின் அட்டகாசத்தினை கட்டுபடுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 
அரூரில் இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா - 20,000 புத்தகங்களுடன் தொடக்கம்
 
தருமபுரி மாவட்டம் அரூரில் தகடூர் புத்தக பேரவை, லைன்ஸ் கிளப், அழகு அரூர் அறக்கட்டளை இணைந்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளிடம் புத்தக வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இரண்டாம் புத்தக திருவிழா தொடங்கப்டட்டது. கடந்த ஆண்டு முதல் முறையாக தொடங்கிய புத்தக திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான புத்தகத் திருவிழா இன்று முதல் 2-ம் தேதி வரை மூன்று  நாட்களுக்கு நடைபெறுகிறது. 
 

 
கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தக கண்காட்சியை பார்வையிட புத்தக வாசிப்பாளர்கள் வருகை குறைவாக இருக்கும் என்பதால், இந்த ஆண்டு புத்தகத் திருவிழா எளிமையாகவே நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் விடுதலை போராட்ட வீரர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள்,  அறிவியல், வரலாற்று நூல்கள், சிறுகதைகள், நாவல், பொது அறிவு, போட்டித் தேர்வைக்கான புத்தகம், குழந்தைகளுக்கான அறிவுத்திறன் பயிற்சி நூல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 8 அரங்குகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 

 
மேலும் மூன்று  நாட்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.  இந்த புத்தக கண்காட்சியை காண முதல் நாளில், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் வந்து பார்வையிட்டு, ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
Continues below advertisement
Sponsored Links by Taboola