காரிமங்கலம் அருகே இரண்டு காட்டு யானைகள் தாக்கியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 மாதத்திற்கு மேலாக சுற்றி திரியும் யானைகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயகள் அச்சமடைந்துள்ளனர்.

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சமீபத்தில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் காட்டிலிருந்து இரண்டு ஆண் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. இன்று காரிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள் பெரிய மொரசப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடி(70) என்பவர் இயற்கை உபாதை கழிக்க விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த காட்டு யானைகள் முதியவரை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்து வேடி சம்பவ இடத்திலேயே பரிதாமபாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து நீண்ட நேரம் ஆன பிறகு முதியவர் இறந்து தெரியவந்தது. தொடர்ந்து பாலக்கோடு வனத் துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரிமங்கலம் காவல் துறையினர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 



 

தொடர்ந்து இரண்டு மாதமாக இரண்டு காட்டு யானைகளும் வனப் பகுதிக்குள் செல்லாமல், பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் சுற்றி திரிந்து வருகிறது. உணவுக்காக விவசாய நிலங்களில் நுழைவதும்,  விவசாய பயிர்களை அழித்தும் வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு இரண்டு யானைகளால் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனை வனத் துறையினர் உரிய முறையில் ஆய்வு செய்து, முறையாக கணக்கெடுத்து சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வனப் பகுதிகளுக்கு செல்லாமல், கிராமப் புறங்களில் சென்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் இந்த இரண்டு காட்டு யானைகள், போச்சம்பள்ளியில் ஒரு இளைஞரையும், மாரண்டஹள்ளி அருகே  ஒரு முதியவரையும் தாக்கியதில் உயிரிழந்து உள்ளனர். ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இன்று காரிமங்கலம் பகுதியில் முதியவரை காட்டி இரண்டு யானைகளும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் பஞ்சப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் இருந்த பெண்ணை யானைகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனால்  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிகளுக்குள் விரட்டி ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.