தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. பென்னாகரம்  மடம் பகுதியில் இருந்து ராட்சச குழாய் மூலம் சாலையின் ஓரமாக பல்வேறு ஊர்களுக்கு  சுத்திகரிக்கப்படட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.  அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பகுதிகளுக்கு ஒடசல்பட்டி  மூக்கனூர் வனப்பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து நீரேற்று மூலம் ஒகேனக்கல் குடிநீர் செல்கிறது. தற்போது தருமபுரி முதல் மொரப்பூர், அரூர், திருவண்ணாமலை, வரை  இரண்டு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தி, சாலை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மொரப்பூர்-அரூர் சாலையில் தம்பிசெட்டிபட்டி அருகே சாலை விரிவாக்க பணிக்காக பைப்லைன் இயந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டும் பொழுது சாலை ஓரம் செல்லுகின்ற பிரதான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுமார் 4 மணி நேரமாக வெள்ளம் பெருக்கெடுத்து அருகில் ஏரிக்கு செல்கிறது. இதனால் சாலையோரம் இருந்த, மூன்று வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் வீணாக செல்லும் தண்ணீர், அருகில் உள்ள ஏரிக்கு செல்வதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் அரூர், தீர்த்தமலை, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒகேனக்கல் குடிநீர் வினியாகண் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை சரிசெய்ய 4 நாட்களுக்கு மேலாகும் என ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.



 

மாரண்டஅள்ளியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த தாய், மகனை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். 

 

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் தணிகாசலம் தலைமையில், பெண் காவலர் முனியம்மாள் உள்ளிட்ட காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் ஒரு பெண்ணும், வாலிபரும் கையில் மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.



 

தொடர்ந்து காவல் துறையினரை கண்டதும், அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள், இருவரையும் தூரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது கையில் வைத்திருந்த 2 மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் 4 கிலோ கஞ்சா, பொட்டலங்களாக கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் , மாரண்டஅள்ளி புதுத்தெருவை சேர்ந்த சகுந்தலா (48), அவருடைய மகன் சீனிவாசன் (20) இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் வீட்டிலே கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.