உயிர் நீத்த கிறிஸ்தவர்கள் சமாதியில் பூஜை செய்யும் நாளாக ஆண்டுதோறும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இன்று கல்லறை திருநாளையொட்டி தருமபுரி நகரப் பகுதி, மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் கல்லறைகளில் பிரார்த்தனை செய்வதற்கு கிறிஸ்தவர்கள் காலை முதல் வரத் தொடங்கினர். சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தோடு கல்லறைக்குச் சென்று உறவினர்களின் சமாதியை சுத்தம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். சிலர் முன்னதாகவே சமாதிக்கு வர்ணம் பூசி மலர்கள் வைத்து அழகு படுத்தி இருந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி கல்லறை திருநாளிலும் இடைவிடாது மழை பெய்து வந்தாலும், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடை பிடித்துக் கொண்டு கல்லறைக்கு சென்று மலர் தூவி, சிலுவைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றியும், சாம்பிராணி புகையிட்டு வழிபாடு நடத்தினர். மேலும் உயிர் நீத்தவர்கள் விரும்பி சாப்பிட்ட பலகாரங்களை சமாதி முன் வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
அரூர் பேருந்து நிலையத்தில், திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டறிக்கை வினியோகம்.
தமிழகத்தில் மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்து வருவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருமுடி கொள்கை தான், மூன்றாவது மொழிக்கு இடமில்லை என்ற போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, திமுக சார்பில் மாநில முழுவதும் பாராட்டுங்கள் நடைபெற்றது. தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அரூர் பேருந்து நிலையத்தில், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டறிக்கை வினியோகம் செய்தனர். இதில் ஒரே நாடு, ஒரே மதம், ஒரு தேர்தல் என்ற வரிசையில், ஒரே மொழியை திணித்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்க பார்க்கிறது. மேலும் இந்தி பேசும் மாநில மக்களை அரசியல் ரீதியாக கவருவதற்கு, மற்ற மொழி பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக பாஜக தலைமை கருதுகின்றது. தொடர்ந்து மத்திய அரசு, இந்தி அரசாக செயல்பட்டு வருவதாக வாசகங்களை அச்சிட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மனோகரன், மாவட்ட துணை செயலாளர் ஆ.மணி, முருகன் பேரூராட்சி தலைவர் இந்திராணி துணை தலைவர் தனபால் நகர செயலாளர் முல்லைரவி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.