சேலம் மண்டலம் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள், நாடக மற்றும் நடிகர்கள் சங்க மாநாடு, அரூரில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ராமாயணம், மகாபாரதம் நினைவு கூறும வகையில், ராமர், அர்ஜுனன், பீமன், சகுனன் போன்று வேடமனிந்து கலைஞர்கள் வந்திருந்தனர். மேலும் இந்த மாநாட்டில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு எளிய வகையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதார கருத்தில் கொண்டு அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். தமிழக அரசு கலை மாமணி விருதுகளை, கிராம பகுதிகளிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள் அவர்களையும் தேர்ந்தெடுத்து கலை மாமணி விருது வழங்க வேண்டும். ஓரிரு படங்களிலே தலையை காட்டிவிட்டு கலை மாமணி விருது பெற்று செல்கின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு, இந்த விருது எட்டாம் கனியாகவே உள்ளது. கலைஞர்களின் ஈமச்சடங்கு செலவிற்கு 10,000 ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் அதிகரித்து வழங்க வேண்டும். தமிழகத்தில் நாட்டுப்புற நல வாரியம் செயல்படாமல் உள்ளது. இதனை உறுப்பினர்களை நிரப்பி திறன் பட செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 2000 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக, ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர். இந்த மாநாட்டில் முத்தமிழ் கலை மன்ற நாடகக் கலைஞர்களின் இயக்குனர் ஆதிமூலம், தருமபுரி மாவட்ட தலைவர் பழனிச்சாமி, தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுபுற கலைஞர்களின் நல சங்க தலைவர் சத்தியராஜ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

 



 

அரூர் அருகே கூலித் தொழிலாளியின் குடிசை வீடு மின் கசிவால் பற்றி எரிந்து நாசம்.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை ஊராட்சி குரும்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான குமரவேல் என்பவர் தனக்கு சொந்தமான குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல் அருகே உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து அதிக புகையுடன் தீபற்றி எரிவதை கண்ட அப்பகுதி பொது மக்கள் குமரவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த குடிசை வீட்டை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் பீரோவில் இருந்து ஆதார் கார்டு, மதிப்பெண் சான்றிதழ், டீசி, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக் உள்ளிட்ட முக்கிய அரசு ஆவணங்கள் மற்றும் ஒரு பவுன் தங்க நகை, பீரோவில் இருந்த் 30000 ரூபாய் ரொக்கம், வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி சேதம் ஆனது. இதுகுறித்து அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மெற்கொண்டதில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தீயில் கருகி சேதமான அரசு ஆவணங்களை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும். மேலும் சேதமடைந்த வீட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.