தருமபுரி மாவட்டம் அரூரில் தகடூர் புத்தக பேரவை, லயன்ஸ் கிளப், அழகு அரூர் இணைந்து மூன்று நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இந்த கண்காட்சி பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளிடம் புத்தகம் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் கடந்த ஆண்டு முதன்முறையாக புத்தக கண்காட்சி இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த 3 நாட்களாக இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டது. இதில் 8 அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் 20 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக புத்தகத் திருவிழா மிகவும் எளிமையாகவே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுமக்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. கடந்த 3 நாட்களாக புத்தக திருவிழாவை ஏராளமானோர் பார்வையிட்டு பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

 



 

இந்நிலையில் இந்த ஆண்டு 3 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் 4.50 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையானது. மேலும் கடந்த ஆண்டு இரண்டு நாட்கள் புத்தக திருவிழாவில் இரண்டு லட்சம் வரை புத்தகம் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2.50 இலட்சம் அளவிற்கு புத்தகம் விற்பனையாகியுள்ளது. இது அரூர் பகுதியில் புத்தகம் வாசிப்பு ஆர்வத்தை தூண்டி இருப்பதாகவும், இனிவரும் காலங்களில், நாட்களை அதிகரித்து கண்காட்சி அமைக்க தகடூர் புத்தக பேரவையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

 



 

சோலைக்கொட்டாய் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சிறார் தடுப்பூசி முகாம்  தொடக்கம் 

 

தருமபுரி அடுத்த சோலைக்கொட்டாய் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படி, தமிழகம் முழுவதும் 16.01.2021 அன்று முதல் கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வழங்கப்பட்டு வந்தது. பின்பு படிப்படியாக அனைத்து முன் களப்பணியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

 

தமிழ்நாட்டில் ஓமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படி இன்று முதல் (03.01.2022) இந்தியா முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர்  15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் செலுத்தும் முகாமினை இன்று (03.01.2022) தொடங்கி வைத்தார்.

 



 

இதனை தொடர்ந்து தருமபுரி இன்று தருமபுரி மாவட்டம் சோலேக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில்  69500 தடுப்பூசிகள் வந்துள்ளது. இதில் பள்ளி குழந்தைகளுக்கு அவரவர் பயிலும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.