தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் நோக்கி இன்று காலை  7 மணிக்கு  கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கண்டய்னர் லாரி பிரகே் பழுதாகி  முன்னாள் சென்ற கார் மோதியது. பின்னர் லாரியை திடீரென திருப்பும் போது பின்னால் வந்த கார் லாரி மீது மோதியவுடன், பின்னால் வந்த அடுத்தது நான்கு கார்கள் ஒன்றன் பின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  3 பேர் பலத்த காயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். 

 



 

மேலும் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து  விபத்துக்குள்ளான 6  காரில் வந்தவர்கள் அனைவரும் கர்நாடகா மாநிலத்திலிருந்து வேளாங்கண்ணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு சென்றவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 6 கார்கள் விபத்துக்குள்ளானதில் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தால், சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



 

சாலை விநாயகர் கோயிலில் 4.48 லட்சம் உண்டியல் காணிக்கை; 7 கிராம் தங்கம், 40 கிராம் வெள்ளியும் கிடைத்தது 

 

தருமபுாி நகாில்  இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற சாலை விநாயகா் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், புதியதாக வாகனங்கள் வாங்குவோர் மற்றும் சுற்றுலா செல்வோர், இங்கு வந்து பூஜை செய்து வழிபாடு செய்துவிட்டு புறப்பட்டு செல்வர். இந்தகோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் முன் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த உண்டியல் ஆண்டுக்கு 3 முறை எண்ணப்படுகிறது.

 



 

இந்நிலையில் இன்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி இந்து அறநிலைய துறை ஆய்வாளர்கள் மணிகன்டன், சங்கர், செயல் அலுவலர் விமலா உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில், அறநிலைய துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை விநாயகர் கோவில் உண்டியலில் கடந்த சில மாதங்களில் பொதுமக்கள் செலுத்தி காணிக்கை, ரூ.4,48,713 இருந்தது. மேலும், 7 கிராம், 100 மில்லி தங்கம் மற்றும், 40 கிராம் வெள்ளி இருந்தது. இந்த காணிக்கை பணம் முழுவதும், இந்து அறநிலைய துறை கணக்கில், கருவூலத்தில் செலுத்தப்பட்டது.