பாலக்கோடு அடுத்த தொல்லேக்காது நீர்வீழ்ச்சி அருகில் சின்னாறு ஆற்றின் அக்கரையில் ஆற்றை கடக்க முடியாமல், சிக்கி தவித்த மூன்று பேரை 24 மணி நேரத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, கேசர்குழி அணை, உப்புபள்ளம் ஆறு உள்ளிட்டவைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தொல்லேக்காது நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள பெரியதோப்பு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி(48) இவரது மனைவி கெளரம்மாள் (45) மகன் குமார் (30) மற்றும் மகேஸ்வரி (33) ஆகியோர் 10 கறவை மாடு, ஆடுகளுடன் மேய்ச்சலுக்காக தொல்லேக்காது நீர்வீழ்ச்சி அருகே, ஆற்றின் அக்கரைக்கு மேய்ச்சலுக்காக சென்றுள்ளனர்.
தொடர்ந்து மாலையில் வீடு திரும்பும் போது திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, 3 அடியிலிருந்து தண்ணீர் 15 அடி வரை உயர்ந்தது. இதனால் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 30 அடி நீளமுள்ள ஆற்றின் கரையின் இருபுறம் கயிறு கட்டி மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது நீண்ட நேரத்திற்கு பிறகு குமார் என்பவரை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் சற்று நீர்வரத்து அதிகரித்தாலும், இரவு ஆனதால், மற்ற மூவரை மீட்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து இன்று மீண்டும் அவர்களை மீட்கும் பணியில் தருமபுரி, பாலக்கோடு தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். அப்பொழுது மீட்பு பணி ஒத்திக்கைகாக உறவினர் ஒருவரை கயிற்றில் அனுப்பி வைத்தனர். ஆனால் அப்போது வெள்ளம் அதிகமானதால், யாரையும் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நீண்ட போராட்டதிற்கு பிறகு, 24 மணி நேரம் கடந்து அனைவரையும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து அக்கரையில் சிக்கியவர்கள் மூவரும், கண்ணீர் மல்க, தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
தருமபுரி எம்பி செந்தில்குமார் தனது சொந்த பணம் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 10 குடும்பங்களுக்கு சோலார் மின் வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார்.
தருமபுரி மாவட்டம் தருமபுரி நகர பகுதி எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் 16 குடும்பங்கள் ஏரி புறம்போக்கு பகுதியில் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மின் இணைப்பு வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. மின்சார வசதி இல்லாமல் 16 குடும்பங்களில் வசிப்பவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன் வி.செந்தில்குமார் தனது சொந்த பணம் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் மூலம் மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார். இந்த வசதியின் மூலம் 10 குடும்பங்களில் வசிப்பவர்கள் மற்றவர்களைப் போல மின்விளக்கு. தொலைக்காட்சி பெட்டி ஃபேன் உள்ளிட்ட மின்சார பொருட்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதனவசதி உடன் கூடிய ஆம்புலன்சை கொடி அசைத்து தொடக்கி வைத்தார். தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயர் சிகிச்சைக்கு சேலம் உள்ளிட்ட வெளிப்பகுதிகளுக்கு செல்லும் நோயாளிகள் இதுவரை உயர்தரமான ஆம்புலன்ஸ் சேவைக்கு தனியாரை நாடும் சூழ்நிலை இருந்தது இனி அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.