தருமபுரி மாவட்டம், ஏரியூனைஅருகே உள்ள, மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, சித்திரப்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊருக்கு இதுவரை முறையான இடுகாடு இல்லை. மேட்டூர் நீர்த்தேக்க கரையில் வாழும் இந்த மக்கள், இறந்தவர்களை மேட்டூர் அணை நீர்தேக்க  பகுதியில் அடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் அணைப்பகுதியில் அடக்கம் செய்ய இடம் இல்லாமல் பிரதான சாலை ஓரம் பிணங்களை எரிக்கின்றனர்.

 



 

 

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், இந்த ஊரின் மூன்று பக்கமும் மேட்டூர் அணையின் நீர்தேங்கி, கிராமத்தை சூழ்ந்துள்ளது. இதனால் மையானத்தில் உடல் அடக்கம் செய்ய முடியவில்லை. இந்நிலையில், இந்த ஊரில் உள்ள முதியவர் ஒரு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உடல் அடக்கம் செய்ய இடம் இல்லாமல், இறந்த முதியவரின் உடலை சாலை ஓராமாகவே வைத்து தீயிட்டு எரித்தனர். அப்போது பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதனை கடந்து செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமல்லாமல் இந்த பாதையை பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவியரும் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே இந்த கிராமத்திற்கு சுடுகாட்டுக்கு வேறு இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 



பாலக்கோடு நகரில் உள்ள நகை  அடகு கடையில் பணியாற்றிய பெண்ணுக்கு, பாலியல் தொந்ததரவு கொடுத்த நகை அடகு கடை அதிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.



 



 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி(52) என்பவர், பாலக்கோடு பஜாரில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் 25 வயதுடைய பெண் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்ரமணி தொடர்ந்து இந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுத்து வந்துள்ளார். மேலும் தனது ஆசைக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், வேலையை விட்டு நிறுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார். 

 

மேலும், நகைகளை திருடி சென்றதாக கூறி காவல் நிலையத்தில் புகார் தந்துவிடுவேன் என தினமும் மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மன உளைச்சல் அடைந்த தெய்வானை கடந்த வாரம் விஷம் குடித்து, தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதனையறிந்த குடும்பத்தினர், அந்த பெண்ணை  மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவலறிந்து வந்த பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது நகை அடகு கடை அதிபர் சுப்பிரமணி பாலியல் தொந்தரவு கொடுத்ததால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுப்பிரமணி என்பவரை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். பாலக்கோடு நகரில் பணிப் பெண்ணுக்கு பாலியல் தொந்ததரவு கொடுத்ததால், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.