சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1534 ஆக உள்ளது. மேலும் 154 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 89,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,397 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1,653 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று இருப்பில் இல்லாத காரணத்தினால் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 9 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களிலும் நாளை தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு :
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு. மேலும் 65 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 461 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 28 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை . நோயிலிருந்து குணமடைந்த 48 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 452 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.