தருமபுரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் ரவி ஒரு அரசியல் கட்சி பிரதிநிதி போல், பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார். கோவை சம்பவம் குறித்து ஆளுநர் பேசியது தமிழக அரசு மீது நேரடியாக போர் தொடுத்துள்ளார். அவர் மிக அபாயகரனமான குற்றசாட்டு சொல்லியிருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இவர் செயல்பாடுகள் எல்லாம் பார்த்தால் எடப்பாடி பழனிசாமி எப்படி மோடி முன் கைகட்டி வாய் பொத்தி நின்றாரோ அப்படியே தமிழக முதல்வர் ஸ்டாலின் நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய கட்சியின் தலைவர், அவர் பேசி, சிறிய விளம்பரத்தை தேடிக் கொள்கிறார். தொடர்ந்து அவர் அரசியல் கட்சி தலைவர்கள் மற்று அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களை அநாகரீகமாக பேசி வருகிறார். கோவை சம்பவத்தில் தமிழக காவல் துறை வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் அரசியல் செய்யவே காவல் துறை மீது தொடர்ந்து அவதூறாக அண்ணாமலை பேசி வருகிறார். கோவை சம்பவத்தில் காவல் துறையின் நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது என கே.அழகிரி தெரிவித்தார்.
காவல் துறை திமுகவின் மற்றொரு அலுவலகமாக செயல்படுகிறது என்ற அண்ணாமலையின் கேள்விக்கு, காவல் துறை முந்தைய காலங்களை விட தற்போது சுதந்திரமாக செயல்படுகிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை நன்றாக கையாளுகிறார்கள். அண்ணாமலை ஆதாரமில்லாமல், அரசியலுக்காக பேசுகிறார். தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன அரசியல் கோமாளி என்ற மொழியில் அண்ணாமலையை சொல்வது தான் சரியானது. எங்களை மாதிரி நல்ல முறையில் பேசினால் சரியாக இருக்காது எனவும் அதிமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு காரணம் பாஜகவின் ஒரு ஆளாக அவர்கள் செயல்பட்டது தமிழகத்தில் அவர் செயல்பட்டது ஒரு தவறு. தற்போது தமிழகத்திற்கு கொடுத்த இதே அழுத்தத்தை அப்போது மோடி எடப்பாடிக்கு கொடுத்தார்கள். இதில் ஸ்டாலின் தாக்குபிடித்து நிற்க்கிறார். எடப்பாடியால் தாக்குபிடிக்க நிற்க்க முடியவில்லை. போட்டி போட்டுக் கொண்டு டெல்லியில் சேவகம் செய்தார்கள். அதனுடைய விளைவு தற்போது அவர்களது இயக்கத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் என அழகிரி தெரிவித்தார்.