தமிழக மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லை என பிலிகுண்ட்லுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்து வந்த நிலையில், தொடர் கனமழையால் நீர் வரத்து படிப்படியாக உயர்ந்தது. இதனால் வினாடிக்கு 1.85 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. கர்நாடக மாநில அணைகள் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் வினாடிக்கு 51,000 கன அடியாக காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. ஆனாலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் வினாடிக்கு 1.50 லட்சம் கன அடி அளவிற்கு மழை நீரை வந்து கொண்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1.85 இலட்சம் கன அடியாக நீர்வரத்து இருந்தது. ஆனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தற்பொழுது மழை குறைய தொடங்கியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1.85 இலட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து, வினாடிக்கு 1.35 இலட்சம் கன அடியாக சரிந்தது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும், காவிரி ஆற்றில் ஒரு வார காலமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேன்க்கல்லில் அருவிகள் மற்றும் பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு எட்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற உபரி நீர் 31,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதாலும், நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நிர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக உடல்காய தினத்தை முன்னிட்டு அரூர் அரசு மருத்துவமனையில் காவலர், மருத்துவர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சைப் பயிற்சி.
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் இன்று உலக உடல் காயம் தினம் - கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முனிட்டு தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் – உதவி செய் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், முதலுதவி அளிப்பவர்கள், தீயணைப்பு துறையினர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சைப் பயிற்சி தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு மூலம் அரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் சாலை விபத்தில் அடிப்பட்டவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு மீட்பு முதலுதவி சிகிச்சையை அழிப்பது குறித்து விரிவான செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், எலும்பு முறிவு, ரத்தப்போக்கு, விஷக்கடி, மின்சாரம் தாக்குதல், நீரில் மூழ்குதல் போன்ற பல அவசர நிலைகளில் முதுலதவி சிகிச்சையை அழிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தன்னார்வலர்கள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.