கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ள சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



இந்த நிலையில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து இன்றைய தினம் பாஜகவினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் கோட்டை பகுதியில் சேலம் மாவட்ட பாஜக சார்பில் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். இதனால் பாஜகவினருக்கும் காவல்துறையினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக போராடக் கூடியவர்களுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசு, கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடிய தங்களுக்கு அனுமதி இல்லை என குற்றம் சாட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை ஈடுபட்ட பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 


முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில துணை தலைவர் கே பி ராமலிங்கம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் இருக்கட்டும் உயிரெழுந்து உள்ளனர். இதற்கு திமுக அரசு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும். அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் பாஜகவின் காவல்துறை வைத்து கைது செய்ய திமுக முயற்சிக்கிறது. காவல்துறை பாஜக ஆர்ப்பாட்டத்தை தடுக்க நினைத்தால் அது விஸ்வரூபம் எடுக்கும் என்று கண்டனம் தெரிவித்தார்.



இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம், கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கன்னுக்குட்டி வீட்டில் ஸ்டாலின் புகைப்படம் தான் இருக்கிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக பெருகி ஓடுவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். எனவே முதலமைச்சர் பதவி விலக வேண்டும் இல்லை என்றால் தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்த அவர், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அடுத்த போராட்டம் நடைபெறும் என குறிப்பிட்டார்.


அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் கே.பி.ராமலிங்கம் உட்பட முன்னுருக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே டீக்கடையில் நின்றுகொண்டு டீ கொடுக்க குடித்துக் கொண்டிருந்த நபர்களும் பாஜக போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் என்று நினைத்து புறப்படும்படி தெரிவித்தனர். மேலும் டீக்கடையில் நின்று டீ கொடுக்க அனுமதி இல்லையா என்று கேள்வி எழுப்பியதால் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் டீக்கடையை மூடும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர்.