சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வருகை தந்து சந்தித்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த திமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளனர். இதன் பின்னர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், அதிமுக மாவட்ட செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் சந்தித்து வருகின்றனர்.



இதனைத் தொடர்ந்து, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநிலதலைவர் சரீப் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து பேசினர். பின்னர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் சரீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக வந்ததாக கூறினார். இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் 36 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று அதிமுக மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக வருகை தந்தார். மேலும் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்ற வாக்குறுதியை என்னிடம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர் குடும்பத்தில் பாதுகாக்கும் விதமாக செயல்பட்டுள்ளார். பாரதிய ஜனதா தனித்து வெற்றிபெற முடியாது. இதற்கு முன்பாக திமுக, அதிமுக என்று திராவிட கட்சிகளின் முதுகில் தான் சவாரி செய்து வந்தது. இனிமேல் அதுபோன்ற நிலைமை தமிழகத்தில் இருக்காது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி உள்ளார். எனவே அவருக்கு இஸ்லாமிய மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு, நோட்டாவிற்கும் போட்டியான தேர்தலாக தான் அமையும் தவிர, வேறு எந்த வெற்றியும் பெற முடியாது. பாஜகவிற்கு எதிராக அதிமுக 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் பெரும் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் மக்கள் அதில் உறுதியாக உள்ளனர்.



பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். முன்னதாக நேற்று, தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க ஆதரவு கோரி மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்ததமிமுன் அன்சாரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அரை மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும் உடன் இருந்தார். தமிழகத்தில் 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை ஜாதி, மத, வழக்கு பேதமியின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகிறது.



இதுதொடர்பான மனுவை அதிமுக பொதுச்செயலாளர் இடம் கொடுத்துள்ளதாக கூறினார். இதற்கு முன்பாக தமிழக முதல்வரிடம் அண்ணா பிறந்தநாளின் போது விடுதலையை உறுதிப்படுத்துங்கள் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதுகுறித்து தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மத்தியசிறைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தில ஈடுபட்டு வருவதாக கூறினார். இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை, இந்த நிலையில் வருகின்ற 9ஆம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு தமிழகஅரசு எந்தவித நடைமுறையை பின்பற்றியதோ? அத்தகையே நடைமுறையை இவர்கள் விஷயத்திலும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.