சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு புகார் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார். இந்த மக்கள் குறைதீர் முகாமில் பல நாளாக இழுபறிகள் உள்ள சொத்து பிரச்சனைகள், பணம் கொடுத்தல் வாங்குவதில் தகராறு போன்ற நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளில் இருதரப்பு வாதத்தையும் கேட்டு காவல்துறையினர் அவர்களின் பிரச்சனையை சமூகமாக முடித்து வைத்தார். பெரும்பாலும் சொத்து பிரச்சனைகள் மட்டுமே அதிக அளவில் நிலுவையில் உள்ளது. எனவே சொத்து பிரச்சனைகளை முடித்து வைத்து இதுபோன்று குறைதீர் முகாமில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஐஜி ராஜேஸ்வரி கூறும் போது, சேலம் சரகத்துக்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாதம்தோறும் இரண்டாவது புதன் கிழமைகளில் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது என்றார். மேலும் சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முகாமில் இதுவரை 60 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே காவல்நிலையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை இல்லாத மனுக்களையும் புது மனுக்களாக சேர்க்கப்பட்டு அந்த மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார். முதற்கட்டமாக மனுக்கள் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்து பின்னர் உரிய விசாரனை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக அதிகளவில் நிலம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மனுக்கள் பெறப்படுகின்றன எனவும் கூறினார்



சேலம் சரகத்தில் 18 போலி மருத்துவர்கள் கண்டறிந்து கைது செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்ப்பது கண்டறியப்பட்டால் கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். கிருஷ்ணகிரி ஆணவக் கொலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும் ஆணவ படுகொலை குறித்து காவல்துறை சார்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார்.