ஒரு கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கிய அதிமுக பிரமுகர் - சிக்கியது எப்படி?

சேலத்தில் பணமதிப்பிழப்பின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகளை பதித்து வைத்திருந்த சபீர் என்பவரை அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Continues below advertisement

இந்தியா முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்தார். அதை எடுத்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய்க்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. பின்னர் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் பணத்தை மாற்றாமல் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நிலவும் எச்சரிக்கப்பட்டது.  

Continues below advertisement

பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்:

இந்த நிலையில் சேலம் மாநகர் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த சபீர், பாலாஜி, கோகுலநாதன் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் அதிமுக பிரமுகரான சபீர் கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பின்போது இவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு 1,000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதனை தான் மாற்றிக் கொடுப்பதாக சபீர் தனது பங்குதாரர்களிடம் கூறி செல்லாத நோட்டுகளை வாங்கியதாக தெரிகிறது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனிடையே பணத்தை கொடுத்தவர்களில் பாலாஜி என்பவர் உயிரிழந்து விட்டார். 

சிக்கியது எப்படி?

பல ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காதது குறித்து சபீரிடம் கோகுலநாதன் கேட்டுள்ளார். அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும், இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அந்த பணத்தை கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்லுமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன், சபீர் சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட அம்மாபேட்டை காவல்துறையினர் சபீரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் செல்லாத 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தாள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்த சபீரைரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola