தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நலப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்த செல்வம் (23) என்பவர் கடந்து 23.01.2018 அன்று தருமபுரியில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது பெற்றோருடன் வந்த 4 வயது சிறுமியை, கடத்தி சென்று அருகில் பூ செடிக்கு மறைவில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அப்பொழுது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் சத்தம் கேட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்கள் வருவதாக கண்டு செல்வம் தப்பி ஓடியுள்ளார். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் செல்வத்தை துரத்தி பிடித்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், செல்வத்தை கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் செல்வம் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கின் சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக செல்வத்திற்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பளித்தார். இதனையடுத்து செல்வம் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 3800 முட்டை மஞ்சள் ரூ.1.80 கோடிக்கு விற்பனை
தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் மஞ்சள் ஏலமும் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அரூர் பகுதியில் உள்ள அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய மஞ்சள் மற்றும் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 689 விவசாயிகள் கொண்டு வந்த 3800 மூட்டை மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் குண்டு மஞ்சள் குவிண்டால் ரூ.5812 முதல் 7869 வரையும், விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.6109 முதல் 9101வரை விற்பனையானது. நேற்றைய ஏலத்தில் விவசாயிகள் கொண்டு வந்த 3800 மூட்டை மஞ்சள் ரூ.1.80 கோடிக்கு விற்பனை ஆனது. மேலும் இந்தாண்டு மஞ்சள் விளைச்சல் அதிகமாக இருப்பதால், அடுத்து வரும் நாட்களில் மஞ்சள் வரத்து அதிகரிக்கும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.