தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, கம்பைநல்லூர், அன்னசாகரம், குண்டல்பட்டி, செம்மாண்டகுப்பம், சவுக்கு தோப்பு, நாய்க்கன்கெட்டாய், இண்டமங்கலம், முத்துக்கவுண்டன்கொட்டாய், பந்தாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பர்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று மாத பயிரான முள்ளிங்கி சாகுபடிக்காக ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவாகிறது.
தருமபுரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் முள்ளங்கி சென்னை, கோயம்பேடு மற்றும் கேரளா மார்க்கெட்டிற்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர். முள்ளங்கி 45 நாள் பயிர் என்பதால், குறைவான தண்ணீர் இருந்தாலும் நன்கு விளைச்சலடையும். மேலும் ஏக்கருக்கு 30,000 முதல் 40,000 வரை லாபம் கிடைப்பதால், கடந்த ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்ததால், முள்ளிங்கி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் கட்டினர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்ட்ட முள்ளிங்கி, தற்போது அமோக விளைச்சல் அடைந்துள்ளது. மாவட்டம் முழுவதுமுள்ள விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், முள்ளிங்கி விலை குறைந்தது. ஆனால் சில நேரங்களில் விலை உயர்ந்து கிலோ 22 முதல் விற்பனை ஆகும். ஆனால் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிக்கும் நேரத்தில், விலை கடுமையாக குறைந்து விற்பனையாகும்.
ஆனால் கடந்த கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து முள்ளிங்கி ஏற்றுமதி செய்ய முடியவில்லை. தொடர்ந்து இன்று வரை முள்ளிங்கி விலை உயராமல், கிலோ 5 முதல் 10 ருபாய்க்குள்ளாகவே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முள்ளிங்கி குறைந்தது 15 ரூபாய்க்கு விற்றால் மட்டும் விவசாயிகளுக்கு பராமரிப்பு, அறுவடை, வாடகை போன்ற செலவுகள் போக போதிய வருவாய் கிடைக்கும். ஆனால் கடந்த ஓராண்டாக விலையில்லாததால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முள்ளிங்கி வயலில் அழுகி வருகிறது. இதனை கூலியாட்கள் வைத்து அறுவடை செய்து, அப்படியே வயலில் விட்டுள்ளனர். இதனால் முள்ளங்கி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.இலட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால், அறுவடை செய்யாமல் இருந்த பாதி வயல்களில் முள்ளிங்கி அழிந்துவிட்டது. கடந்த ஓராண்டாக போதிய வருவாய் கிடைக்காத இருந்து வந்த நிலையில், தற்போது மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முள்ளிங்கி விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.