சேலத்தில் நலிவடைந்த ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஏற்பாட்டின்படி நடத்தப்பட்டது. இதில் 25 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், ஆட்டோ ஓட்டுநருக்கான சீருடைகள் மற்றும் இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்டவைகள் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரால் வழங்கப்பட்டது. இதில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த 220 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சீருடைகள் மற்றும் 50 நபர்களுக்கு இஸ்திரி பெட்டிகளை அமைச்சர்கள் வழங்கினர்.



இந்த நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், வருகின்ற 27 ஆம் தேதி விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் சேலம் எடப்பாடியில் ஆயிரம் திமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று திமுக கட்சியை வளர்ப்பதற்கு ஆங்காங்கே உள்ள கட்சி நிர்வாகிகள் அவர்களின் பகுதிகளில் கட்சியை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் சென்னையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கட்சிக்காக சிறப்பாக செயல்பட்டு எனக்கு முன்னுதாரணமாக செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமான பங்கேற்றனர்.



இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் 


எடப்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் கவனிக்க பெண்களுக்கான 16 படுக்கைகள். பச்சிளம் குழந்தைகளுக்கான 4 படுகைகள் மற்றும் நவீன சமையலறை புதிய கட்டடத்தையும், எடப்பாடி அரசு மருத்துவமனை, நாச்சியூர், சமுத்திரம், மாட்டையாம்பட்டி மற்றும் கூனாண்டியூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சுமார் 2.40 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சேலம் மாவட்டத்தில் மருத்துவ துறை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு முயற்சியால் 6 கோடி 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் படுகைகளோடு கூடிய தற்காலிக மருத்துவமனையை சேலம் இரும்பாலையில் மிகப்பெரிய அளவில் மாநகர மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சேலத்திற்கு இன்னுமும் கூடுதல் வசதியாக 35 நகர்ப்புற நல வாழ்வு மையங்களை உருவாக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர் ஆகிய மூன்று நகராட்சிகளில் நலவாழ்வு மையங்கள் அமைக்கும் கட்டமைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 27 நலவாழ்வு மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் அடுத்த மாதம் தொடக்கத்தில் 500 மருத்துவமனைகளை காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளார். மற்ற மாவட்டங்களை காட்டிலும் சேலத்தில் கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்கிற பொறுப்பு அமைச்சர் கே என் நேரு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாட்டு முதலமைச்சர் சேலத்தில் மட்டும் 22 துணை சுகாதார நிலைய கட்டிடங்களை கட்ட 7.14 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மக்களை தேடி மருத்துவ முகாம் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பி உள்ளது குறித்து கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறும் போது தெரிந்தும் தெரியாதபோல் நடிப்பவரையும், தூங்குவது போல் நடிப்பவர்களையும் எழுப்ப முடியாது அதே போல் சுகாதாரத் துறையில் என்ன நடக்கிறது என்பது குறித்து அவருக்கு நன்றாகவே தெரியும். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மகத்தான வெற்றி என்பது மக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதிலிருந்து தெரிகிறது. ஒரு கோடியே ஒன்னாவது பயனாளிக்கும் முதலமைச்சர் தொடங்கி வைத்து களப்பணிகளை ஆராய்ந்து வருகிறார். இதற்காக 681 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இதுவரை 407 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்களை தேடி மருத்துவத் திட்டம் முகாம் மூலம் 87 சதவீதம் பேர் பரிசோதனை செய்துள்ளனர். இது பற்றி தெரியாமல் கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி மக்கள் பற்றியும் சேலம் மாவட்ட மக்களை பற்றியும் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்களுக்கு தற்பொழுது 2.40 கோடி நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளோம். 


அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது குறித்து கேள்விக்கு இந்த திட்டத்தை மூடியவர்களே அதிமுகவினர் தான், நாங்கள் மூடவில்லை திறந்து ஓராண்டுக்குள்ளேயே அந்த திட்டம் முடக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் முடங்கிக் கிடக்கும் டேனிடா திட்ட ஆரம்ப சுகாதார நிலையம் குறித்து கேட்டதற்கு நிதி ஆணையத்திடம் 800 கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நிதி மத்திய அமைச்சர் விரைவில் விடுவிப்பதாக தெரிவித்துள்ளார். நிதி வந்த பிறகு இந்த திட்டங்கள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து பேசிய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கிழக்கு மேற்கு கால்வாயில் உடனடியாக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை எடுத்துக்கூறி உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தர். சேலத்தில் செயல்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திருச்சி மாநகருக்கு அறிவிக்கப்பட்ட திட்டத்தை வீரபாண்டியர் சேலத்திற்கு கொண்டு வந்து விட்டார். இருந்தபோதிலும் அதற்கு இணையாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 100 கோடி ரூபாய் அளவிற்கான மருத்துவ திட்டங்களை திருச்சியில் செயல்படுத்தி கொடுத்தார். திருச்சியில் மருத்துவம் சார்ந்த பல்வேறு துறைகளிலும் தன்னிறைவு பெற்றுள்ளது போல் சேலம் மாவட்டமும் தன்னிறைவு பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.