தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். இதில் பென்னாகரம் பகுதியில் ஒரு வீட்டில் மாமியார் மருகள் சேர்ந்து 4 பேர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களது வீட்டில் சோதனை செய்த போது, வீட்டில் இருந்த டிவி பின்புறம் தனியாக அறை அமைத்துள்ளனர்.

 



 

அதில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, தீபாவளி பண்டிகை நாளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வைத்துள்ளனர். இதனை கண்டறிந்த காவல் துறையினர், அந்த அறையில் இருந்த 600 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த மாமியார் லட்சுமி மற்றும் மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை  காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் உள்ள நிலையில், விடுமுறை நாளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய, ரகசிய அறையில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 





 

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் தமிழக எல்லை என பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. இதனால் வினாடிக்கு 1.85 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. மேலும் கர்நாடக மாநில அணைகள் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் வினாடிக்கு 31,000 கன அடியாக காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுகிறது. ஆனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தற்பொழுது மழை குறைய தொடங்கியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1.35 இலட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து, வினாடிக்கு 80,000 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும், காவிரி ஆற்றில் ஒரு வார காலமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் அருவிகள் மற்றும் பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு 9-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் திறக்கப்படுகின்ற உபரி நீர் குறைக்கப்பட்டுள்ளதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதாலும், நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நிர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.