தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு  ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர். தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு வரத்து கடுமையாக குறைந்து ரூ.7 இலட்சத்திற்கு விற்பனையானது. 



இந்நிலையில் நேற்று நடைபெற்ற  ஏலத்தில், பட்டுக்கூடுகள் வரத்து அதககரித்து 27 விவசாயிகள் கொண்டு வந்த 2266 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.15.25 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம்  ரூ.570 க்கும், அதிகபட்சமாக ரூ.726-க்கும், சராசரியாக 672 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக பட்டுக்கூடு வரத்தும், விலையும் குறைந்து 7 இலட்சம் மற்றும் 5 இலட்சத்திற்கு விற்பனையானது.  ஆனால் நேற்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 2266 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.15.25 இலட்சத்திற்கு விற்பனையானது. மேலும் பட்டுக்கூடுள் வரத்தும், விலையும் அதிகரித்ததால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



 

தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தை சார்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருடன் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் தலைமை துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில்‌ தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் பட்டியலிடப்பட்ட சாதிகள்/பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை அமல்படுத்துவது மற்றும் சமூகச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் கொடுக்கின்ற மனுக்கள் மீது உடனடியாக விசாரணை அவர்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைய அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ADGP SJ&HR - எச்.எம்.ஜெயராம், தாட்கோ நிர்வாக இயக்குனர் கந்தசாமி, பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை, காவல்துறை கண்காணிப்பாளர்கள், தருமபுரி -சி.கலைசெல்வன், கிருஷ்ணகிரி-சரோஜ்குமார் தாக்கூர், சேலம் எம்.ஸ்ரீ அபினவ் IPS, மாவட்ட வன அலுவலர், தருமபுரி வனப் பிரிவு கே.வி.ஏ.நாயுடு,  துணை ஆட்சியர், ஓசூர் R. சரண்யா, கூடுதல் ஆட்சியர் தீபனவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர், அனிதா, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவிதா, ஆர்.டி.ஓ.க்கள் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர், விஜிலென்ஸ் செல் அதிகாரிகள் மானுடவியலாளர்கள், தாசில்தார்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் இதர பணியாளர்கள் கலந்து கொண்டனர்.