தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற இரவு அன்று சென்னை வேளச்சேரியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற நபர்களை  பொதுமக்கள் மடக்கிப்பிடித்து  போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து, ஊழியர்கள் கொண்டு சென்றது பழுதான விவிபேட் இயந்திரங்கள் என தேர்தல் அதிகாரி பிரகாஷ் விளக்கமளித்திருந்தார்.


இந்நிலையில், விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும், விதிமீறல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரி கூறியிருந்தார்.




 


இந்நிலையில், வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கிச் சென்ற விவகாரம் தொடர்பாக, வேளச்சேரி தொகுதி வாக்குச்சாவடி எண் 92ல் வரும் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.