வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா என தெரிந்துகொள்ளவும் வில்லங்க சான்று பெறுவது வழக்கம்.

 

இன்று எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணையம் வழியாக எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க‍ முடிகிறது. அந்த வரிசையில் EC (என்கம்ப்ரன்ஸ் சர்டிபிகேட்) எனப்படும் வில்லங்கச் சான்றிதழைகூட எளிதாக ஆன்லைனில் பெறலாம். முன்புபோல் வில்ல‍ங்கச் சான்றிதழ் கேட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாட்க்கணக்கில் நடையாய் நடக்க‍வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் நம் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு குறைவுதான். அமர்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் வில்லங்கச் சான்றிதழை பெறலாம்

 

இணையத்தில் பெறும் முறை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வில்லங்கச் சான்று வழங்க ஆகும் காலதாமதம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தின் மூலம் விண்ணப்பித்து, வில்லங்க சான்றிதழை விரைவாக பெறும் சேவையை பத்திர பதிவு துறை தொடங்கியது.

 



 

இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்று பெற விரும்புபவர்கள் உரிய கட்டணத்தை இணையத்தில் செலுத்தி தபால் மூலம் அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து இரண்டு நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம்.

வீட்டிலிருந்தவாறு இணையத்தின் ஒரு குறிப்பிட்ட‍ ஆண்டுக்கு முன்புதான் இணையத்தில் விவரம் கோர முடியும். அதற்கு முந்தைய ஆண்டில் சொத்தின் தன்மையை பார்க்க‍ அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத்தைநாடி, பெற்றுக் கொள்ள‍லாம். இணையம் மூலமாக வில்லங்க சான்றிதழை பெறும் வசதி இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பெறவேண்டுமானால் தமிழகப் பதிவுத்துறையின் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அந்த இணையதளத்தில் வில்லங்க சான்றை பார்ப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் தனி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

வில்லங்க சான்றை பார்ப்பதற்கு, "E-services - Encumbrance Certificate - View EC" என்ற ‘லிங்க்கினை க்ளிக்’ செய்வதன் மூலம் வில்லங்கச் சான்றிதழை இலவசமாகப் பார்க்கலாம். வில்லங்க சான்றை பெற, "Apply online" என்ற ‘லிங்க்கினை க்ளிக் செய்வதன் மூலம் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் படிவம் திறக்கும். பெயர், தொலைப்பேசி எண், பதிவு மண்டலம், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி மற்றும் மாதங்கள் உட்பட எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் தேவைப்படுகிறது என்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

 



 

பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள ஊர் ஆகிய தகவல்களை பதிவு செய்தும் வில்லங்க சான்று விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரகசியக் குறியீட்டு எண்ணை தருவதன் வாயிலாக 10 நிமிடங்களுக்குள் வில்லங்கச் சான்று விவரங்களை இணையத்தில் பார்க்க இயலும். அத்துடன் PDF வடிவத்திலும் வில்லங்கச் சான்று விவரங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையத்தின் மூலம் வில்லங்க சான்று விவரங்களை இலவசமாகப் பெறுவது சுலபமான ஒன்றாகிவிட்டது. மேலும் விவரங்களறிய வாங்கவிருக்கும் சொத்து, எந்த‌ சார்பதிவாளர் அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட‍தோ அந்த சார்பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

 

வில்லங்கச்சான்றிதழில் வாங்கவிருக்கும் சொத்து, எந்த தேதியில் பதிவு செய்யப்பட்டது? யார் யார் பெயரில்? எந்தெந்த‌ ஆண்டுகளில் இந்த சொத்து அனுபவத்தில் இருந்தது? யார் யாரிடம் கைமாறி வந்திருக்கிறது? உள்ளிட்ட விவரங்களும் தெள்ள‍த் தெளிவாக தெரிவித்து விடும். ஒரு குறிப்பிட்ட‍ ஆண்டுக்கு முன்புதான் இணையத்தில் விவரம் கோரமுடியும். அதற்கு முந்தைய ஆண்டில் சொத்தின் தன்மையை பார்க்க‍ அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத்தைநாடி, பெற்றுக் கொள்ள‍லாம்.