பிரதமரின் முதன்மை ஆலோசகர் ராஜினாமா!

சின்ஹா இந்தியாவின் மிகவும் அதிகார வலிமைவாய்ந்த நபர்களில் ஒருவராக அறியப்பட்டவர். ரகுராம் ராஜனுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் பட்டேலைத் தேர்வு செய்த குழுவுக்குத் தலைமை வகித்தவர்

Continues below advertisement

பிரதமரின் முதன்மை ஆலோசகர் பிரதீப் குமார் சின்ஹா ராஜினாமா செய்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. 65 வயதான பிரதீப் குமார் சின்ஹா 1977ம் ஆண்டின் ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர். டெல்லி பொருளாதாரப் பள்ளியில்  முதுகலைப் பொருளாதாரம் பயின்றவர். 2015 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் கேபினேட் செயலாளராக இருந்த சின்ஹா கடந்த செப்டம்பர் 2019ல் பிரதமரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

Continues below advertisement

பிரதமரின் பதவிக்காலத்தோடு இவரது பதவிக்காலமும் முடிவடையவிருந்த நிலையில் தற்போது திடீரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சின்ஹா. தனிப்பட்ட காரணங்களால் சின்ஹா ராஜினாமா செய்ததாக பிரதமர் அலுவலக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.



கப்பல்துறை மற்றும் மின்சக்தித்துறைச் செயலாளராக இருந்த சின்ஹா இந்தியாவின் மிகவும் அதிகார வலிமைவாய்ந்த நபர்களில் ஒருவராக அறியப்பட்டவர். ரகுராம் ராஜனுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் பட்டேலைத் தேர்வு செய்த குழுவுக்குத் தலைமை வகித்தவர் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.   

Continues below advertisement
Sponsored Links by Taboola