Premalatha Vijayakanth: பெண்கள் முதற்கொண்டு இப்போது குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்; கஞ்சா பழக்கம் மிக அதிகமாக உள்ளது - பிரேமலதா விஜயகாந்த்

3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் உலகப் பிரசித்தி பெற்றது. இதனை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு.

Continues below advertisement

திராவிட மாடல் என்று சொல்லி அவர்கள்தான் மாடலாக இருக்கிறார்கள் ஒழிய நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த ஒரு முன்னேற்றத்தை வளர்ச்சியும் கொண்டு வரவில்லை என தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். 

Continues below advertisement

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். இவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். 


பின்னர் அவர்  செய்தியாளர்களை சந்தித்து  கூறுகையில், "தமிழகத்திலிருந்து அத்தனை வளங்களும் சுரண்டப்படுகிறது என்றால் கேள்வி கேட்க ஆள் இல்லையா? ஆளுங்கட்சியை கேட்டால் முன்னர் ஆட்சி செய்த கட்சியினர் தான் அனுமதி கொடுத்ததாக கூறுகின்றனர். எதிர்கட்சியினர் ஆளுங்கட்சியை கூறுகின்றனர். இவ்வாறு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி குறை சொல்கிறார்கள் இது வண்மையாக கண்டிக்கப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட ஒரு நியாயமான அதிகாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது எந்த வகையில் நியாயம்? உண்மையானவர்களுக்கும்,நேர்மையானவர்களுக்கும் இந்த நாட்டில் இடம் இல்லையா?


செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்தது தொடர்பான கேள்விக்கு? செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்தது.. காவல்துறை எங்களுக்கு சொல்லவே இல்லை.. தகவல் கொடுக்கவில்லை என்று காவல்துறை அதிகாரி கூறினார். ரெய்டு என்றால் என்ன என ஒரு காவல்துறை அதிகாரிக்கு தெரியாதா? யாருக்கும் சொல்லாமல் திடீரென்று வருவது தான் ரெய்டு, இதில் இருந்தே எந்த அளவுக்கு ஒரு கை பாவையாக மாறி உள்ளது காவல்துறை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. 

அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.. கனிமவள  கொள்ளையை தடுக்கின்ற விஏஒ க்கு பாதுகாப்பு இல்லை. இது எங்கே போய்க் கொண்டிருக்கின்றது. மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்..மக்கள் திருந்த வேண்டும்.. ஆட்சிகள் மாற வேண்டும்.. நல்லது நடக்க வேண்டும் என்ற அவர், ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று இருக்கிறார். ஏற்கனவே துபாய் போயிட்டு வந்து தமிழகத்தில் எத்தனை தொழிற்சாலைகளை திறந்து இருக்கிறார். எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வந்துள்ளது.  எத்தனை இண்டஸ்ட்ரீஸ் எத்தனை வேலை வாய்ப்புகள் வருகிறது என பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குப் பின் அதற்கான கேள்வியை நாம் எழுப்புவோம். 


3 மருத்துவ கல்லுரிகளின் உரிமம் ரத்து செய்து இருக்கிறார்கள். ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் உலகப் பிரசித்தி பெற்றது. இதனை ரத்து செய்தது தமிழகத்திற்கு ஒரு தலை குனிவு, தமிழக அரசையோ தமிழக ஆட்சியில் இருக்கிற அவர்களையோ கேள்வி கேட்டு விடக்கூடாது.. பெண்கள் முதற்கொண்டு இப்போது குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். கஞ்சா பழக்கம் மிக அதிகமாக உள்ளது. தமிழகம் போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் , பெண்கள், ஆண்கள் என எதிர்காலத்தில் வீணாக போகக் கூடிய நிலையை இந்த தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது. மக்கள் மாறினால் எல்லாம் மாறும் . 

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள், ஒரு நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது.திராவிட மாடல் என்று சொல்லி அவர்கள்தான் மாடலாக இருக்கிறார்கள் ஒழிய நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த ஒரு முன்னேற்றத்தை வளர்ச்சியும் கொண்டு வரவில்லை" என்றார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள விஏஓ வீட்டில் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Continues below advertisement