சமீப காலமாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் நிதித்துறை அமைச்சர் PTR எனப்படும் பழனிவேல் தியாகராஜன் , இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதும் கடிதங்களில் இந்திய ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுள்ளதை அனைவரும் கவனித்து இருப்பீர்கள். இதில் பெரும்பான்மை ஆனவர்கள் ஏன் தமிழக முதல்வர், மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு இருக்கிறார் என்ற குழப்பத்திலும் சந்தேகத்திலும் உள்ளனர் . இது தற்பொழுது ஒரு பேசும் பொருளாகவே மாறி உள்ளது எனவும் கூறலாம்  .






இது தொடர்பாக நாம் ஒரு சட்ட வல்லுனரை தொடர்பு கொண்டபொழுது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்திய அரசு பல மாநிலங்களை உள்ளடக்கிய 'ஒன்றிய அரசுதான்' என்று தெளிவாக குறிப்பிடுகின்றது. இந்திய நாடு 1947-ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றபொழுது இந்திய டொமினியன், (Dominion of India ) என்று அழைக்கப்பெற்றது .






அதாவது டொமினியன் என்பதற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒரு நிலப்பகுதி, தற்பொழுது  சொந்த அரசாங்கமாக செயல்படும் தகுதி அடைந்த நாடாக அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது டொமினியோன்யனின் டொமினியனின் விளக்கம் ஆகும். இவ்வாறு  இந்திய டொமினியன் என்று அழைக்க பெற்ற சுகந்திர இந்தியா ஜனவரி மாதம் 26-ஆம் தேதி 1950-ஆம் ஆண்டு  புதிய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி குடியரசு நாடக தகுதி உயர்வு பெற்று டொமினியன் தகுதியில் இருந்து நீக்கப்பட்டது .



நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கடிதம் 


 


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு ஒன்றின்படி, “இந்தியா அல்லது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றமைப்பாகும்” என்று தெரிவிக்கின்றது. இந்திய அரசியல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு நாடான  இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களையும் மற்றும் 9 ஆட்சிநிலப் நிலப்பகுதிகள் மைய மற்றும் மாநில அரசுகளை ஒன்று இணைந்து செயல் படுவது ஆகும் .



அதன்படி அதிகார பகிர்வுகளில் மைய அரசுக்கு தேசிய அளவில் முக்கியமான துறைகளில் அதிகாரமும் , மாநில அரசுகளுக்கு மாநில அளவில் முக்கியமான துறைகளில் அதிகாரமும் பகிர்ந்து அளிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள், இந்தியா குடியரசு பெற்ற காலம் முதலே மைய அரசுகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முன்னிறுத்துகின்ற இரட்டை அரசாங்க முறை மற்றும் மாநில அரசுகளுக்கு கொடுத்திருக்கின்ற அதிகார பகிர்வு உள்ளிட்டவைகளை நசுக்கும் சர்வாதிகாரிகளாகவே செயல் பட்டு வருகின்றது அறிஞர் அண்ணா காலம் முதல் மாநில அரசுகளின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. 1962-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி மாநிலங்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்திய முன்னாள் தமிழக முதலமைச்சர் , மத்திய அரசிடம் வெளியுறவுத் துறை, பாதுகாப்பு, நிதி, ரயில்வே ஆகிய நான்கு துறைகள் மட்டுமே இருக்க வேண்டும் மற்ற கல்வி , மருத்துவம் உள்ளிட்ட துறைகள் அந்தந்த மாநில அரசுகளின்  கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இந்திய அரசியல் அமைப்பு முன்னிறுத்துகின்ற மைய , மாநில அரசுகளின் அதிகார பகிர்வு சமநிலை அடையும் என்று உரையாற்றினார்  .



அவரை தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்ட பல முதல்வர்களும் மாநில அரசின் அதிகார பகிர்வுக்கு இன்றளவும் போராடி கொண்டுதான் உள்ளனர். இந்த நிலை தமிழ் நாட்டிற்கு மட்டும் இல்லை இந்தியா முழுவதும் உள்ள 28  மாநிலங்களிலும் இதே நிலை தான் உள்ளது. இந்தியா பல மாநிலங்களின் ஒன்றிணைப்பு என்பதை தற்பொழுது ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு உணர்த்தும் வகையில் தான் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுள்ளார்  என்று தெரிவித்தார், தியாகு .