பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பிரம்மோஸ் ஏவுகணைகளை வைத்து நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் ராணுவமே எதிர்ப்பார்க்கவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
அஜர்பைஜான் பயணம்;
அஜர்பைஜானுக்கு பயணம் மேற்க்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அசிம் முனீர் தலைமையிலான இராணுவம், மே 10 ஆம் தேதி காலை தொழுகைக்குப் பிறகு இந்தியாவைத் தாக்க திட்டமிட்டிருந்ததாகக் கூறினார். இருப்பினும், விடியும் முன்பே இந்தியாவின் நீண்ட தூர சூப்பர்சோனிக் பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் மீது மழை பொழிந்ததாக அவர் கூறினார்.
தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக்.பிரதமர்:
அதிகாலை தாக்குதல் குறித்து முனீர் தனக்குத் தகவல் அளித்ததாகவும், அவர் தற்போது ஃபீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் கூறினார்.
"மே 9-10 இரவு, இந்திய ஆக்கிரமிப்புக்கு நாங்கள் அளவோடு பதிலளிக்க முடிவு செய்தோம். நமது எதிரிக்கு பாடம் கற்பிக்க ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அதிகாலை 4.30 மணிக்கு செயல்பட நமது ஆயுதப் படைகள் தயாராக இருந்தன. ஆனால் அந்த நேரம் வருவதற்கு முன்பே, இந்தியா மீண்டும் பிரம்மோஸைப் பயன்படுத்தி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது மற்றும் ராவல்பிண்டியில் உள்ள விமான நிலையம் மற்றும் பிற இடங்கள் உட்பட பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களை குறிவைத்தது," என்று அஜர்பைஜானின் லாச்சினில் நடந்த பாகிஸ்தான்-துருக்கி-அஜர்பைஜான் முத்தரப்பு உச்சி மாநாட்டில் பேசிய ஷெரீப் கூறினார்.
மே 10 ஆம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டிருந்ததாக பிரதமர் கூறினார். இருப்பினும், விடியற்காலையில், இந்தியா முன்கூட்டியே பிரம்மோஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ராணுவ நிலைகளைத் தாக்கியதாக ஒப்புக்கொண்டார்.
பாகிஸ்தானின் திட்டமிட்ட தாக்குதலுக்கு முன்பு இந்தியா ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் தளத்தையும் சக்வாலில் உள்ள முரித்தையும் அழித்ததாக ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தியா குறிவைத்த 11 இராணுவ தளங்களில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளமும் ஒன்றாகும்.
பஹல்காம் தாக்குதல்:
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே 7 அன்று இந்தியா ' ஆபரேஷன் சிந்தூர் ' என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானின் எல்லையைத் தாண்டி பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.