கேரளாவில் ஆட்சிக்கு வந்தால் லவ் ஜிகாதிற்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கேரளாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நேற்று தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சி, மக்கள் நல பென்சன் ரூ. 1,600-இல் இருந்து ரூ. 3, 500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மிக முக்கியமான வாக்குறுதியாக மதமாற்றும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் லவ் ஜிகாதிற்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை விவகாரத்தில் அய்யப்பன் கோவிலின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்றும், அரசியல் கட்சிகள் பிடியில் இருக்கும் கோவில்கள் விடுவிக்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.