புதுச்சேரியில் ஊசுடு தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் நராயணசாமி பேசுகையில், காங்கிரஸில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிலருக்கு சீட் கொடுத்து, 5 ஆண்டுகள் பதவியை அனுபவித்து விட்டு கட்சிக்கு துரோகம் செய்து சென்றோர் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும். முதல்வர் கனவில் சென்றவர் தொப்பி போட்டு சுற்றுகிறார். எம்பி கனவில் சென்றவர் ஏமாந்து போய் உள்ளார். முதல்வர் அலுவலகத்தில் அமரக்கூட வைப்பதில்லை; நிற்க வைக்கிறார். தமிழை மறந்து இந்தியில் கட்அவுட், தொப்பி அணிந்து தரமற்ற அரசியல் செய்கிறார்கள். வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என்ற மூன்று மந்திரங்களை வைத்து கொண்டு தரமற்ற அரசியலை செய்கிறார் மோடி. என்னையும் மிரட்டி பார்த்தார்கள். பாஜகவுக்கு பயப்படுபவன் நான் இல்லை; இறக்கும் வரை காங்கிரஸ் தொண்டன்தான்.

Continues below advertisement

Sekar Babu : மனசாட்சி உள்ள யாரும் அரசியல் செய்ய வேண்டாம்... அதிமுகவினருக்கு பாடமெடுத்த சேகர்பாபு!

Anbil Mahesh Speech தேர் விபத்து - சம்பவ இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

Continues below advertisement

பின்னால் அழுக்கு மூட்டை வைத்துள்ளோர் பயப்படலாம். காங்கிரஸ் ஆட்சியில் 4 ஆண்டுகள் 10 மாதங்கள் பதவியில் இருந்து விட்டு அங்கு ஓடி என்ன கிடைத்தது. ஆட்சியமைத்து ஓராண்டு ஆகிறது. அதிகப்படியாக மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்கி இருக்கிறார்களா? காங்கிரஸ் ஆட்சியில் பத்து சதவீதம் கூடுதலாக நிதி வாங்கினோம். தற்போது எதுவும் நடக்கவில்லை. புதுச்சேரி வந்த அமித்ஷா என்ன புதிய திட்டம் அறிவித்தார்? காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புதல் கொடுத்த திட்டங்களையும், கிரண்பேடி நிறுத்தி வைத்த கோப்புகளை தூசி தட்டி கையெழுத்து போடுகிறார்கள். பொம்மை ஆட்சி நடக்கிறது. பொம்மலாட்டத்தை ஆளுநர் நடத்த அதில் இங்குள்ளோர் பொம்மையாக ஆடுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண