சட்டசபையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவர் செல்வப்பெருந்தகை மகாமகம் விபத்து குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பேசியதை வாசித்து காட்டினார். அதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.


இந்த நிலையில், இன்று சட்டசபையில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். நீங்க ஏன் மதுரையை இழுத்தீர்கள்? நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது அவர்கள் பேசியதை மக்கள் நன்றாக அறிவீர்கள்.  




எங்கள் தலைவர் கலைஞர் பற்றி மக்கள் நன்றாக அறிவார்கள். எதற்கும் பயப்படாதவர். அறிவாற்றல் மிக்கவர். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பற்றி சிரிப்பை பற்றி கவலைப்படாதவர். நீங்கள் உங்கள் தலைவரைப்பற்றி பேசும்போது எந்த அமைச்சராவது குறுக்கிட்டு ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்கின்றனரா?


ஆனால், அப்போது அமைச்சராக இருந்த ஜெயக்குமார் கைது செய்தபோது அவர் எந்தளவிற்கு ஓவென்று கதறினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றார். அதுபோல பேச வேண்டாம் என்று கூறியபிறகும்  ஜெயக்குமார், தொலைக்காட்சியில் அது தெளிவாக வந்துள்ளது. அய்யோ கொல்கிறார்களே? என்று பேசுவது வந்துள்ளது என்றார். ஆற்காட்டார் எல்லாரும் போல தலைவரைப் புகழ்ந்து பேசினார். அதில் என்ன தவறு?




அன்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்த துரைமுருகன் தயவுசெய்து இதை அவைக்குறிப்பில் இருந்து எடுக்க வேண்டும் என்று கேட்டார். அப்போதைய உறுப்பினர் ஜி.கே.மணியும் இதை நீக்க வேண்டும் என்று கேட்டார். அப்போதைய முதல்வர் அம்மையாரும், சட்ட அமைச்சர் எதுவும் தவறாக சொல்லவில்லை. ஆற்காடு வீராசாமி பேசியபோது தி.மு.க. தலைவர் கைதாகும்போது அவர் தைரியத்தை தொலைக்காட்சியில் பார்த்தோமோ? இதில் தரக்குறைவாக எதுவும் இல்லை. இதை அம்மா சொன்னார். இதற்கு உரிய விளக்கத்தை சட்ட அமைச்சர் அதற்குரிய வகையில் சொன்னார் என்றார். என்ன விளக்கம் என்று எங்களுக்கும் தெரியவில்லை.


அப்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் தைரியமானவர் என்று பெயரைச் சொல்லியே கூறினார் அம்மா” என்றார்  அமைச்சர் பொன்முடி.


அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பேசியதை குறிப்பிட்டு அமைச்சர் பொன்முடி பேசியபோது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர். அப்போது, ஆவேசமடைந்த பொன்முடி சும்மா உக்காருயா" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண