தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் இசுலாமிய கைதிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில், அந்த கட்சியின் பேச்சாளர் ஹிம்லர் பேசும்போது, தமிழக முதல்வர் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக கூறி, திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் தலைமையிலான தி.மு.கவினர் மேடையில் ஏறி மைக்கை பிடிங்கி, நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான வீடியோ விவகாரம் இருதரப்பிலும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.  இந்நிலையில் “நாம் தமிழர் கூட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும்” என அன்புமணி இராமதாஸ் ட்வீட் செய்தி வலியுறுத்தியுள்ளார். 

அதில், “தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.  சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும் தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்”. என்றும்,





 



 விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது. வன்முறைக்களமாக மாறிவிடும். அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது.  அதைக் கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல்  அனைவரும் தடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.






 

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ்..