திருச்சி மாநகர் திருச்சி -  திண்டுக்கல்  தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜி நகர் பகுதியில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த சுமார் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு என 30 ஆயிரம் பேருக்கு பிரியாணி தயார் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துறைமுருகன்,  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மற்றும் பல அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 




இந்த நிகழ்ச்சி மேடையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். திமுகவை நம்புங்கள், நமது தலைவரை முழுமையாக நம்புங்கள் ஒரு சில மாதங்களில் உங்களுடைய பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். பல்வேறு நிதி சுமையா நமது முதலமைச்சர் ஆட்சியை நடத்தி வருகிறார்.  தினந்தோறும் தொடர்ந்து நமது ஆட்சியின் மீது பல்வேறு தரப்பினர் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் அவற்றையெல்லாம் நாம் பொருட்படுத்த கூடாது. மேலும் நம் அனைவரும் உண்மையாக தலைவருக்கு பணியாற்றினால், உழைப்புக்கு ஏற்ற பதவிகள் நிச்சயம் கிடைக்கும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் சிறப்பாக தீவிரமாக பணியாற்ற வேண்டும். நாம் அனைவரும் தலைவரின் தம்பியாக, கலைஞரின் பிள்ளைகளாக சரியாக செயல்பட வேண்டும். நாம் சரியாக பணியாற்றவில்லை என்றால், மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விடுவோம். நாம் அனைவரும் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்று தீர்மானிக்கும் இடத்தில் உள்ளோம். ஆகையால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நம் அனைவரும் தீவிரமாக செயலாற்றி வெற்றி பெறுவோம்” என்றார்.



 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண