தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் காலை 7மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு அமைதியான முறையிலும் விறுவிறுப்பாகவும் காலை முதல்  நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் முதுகுளத்தூர் அருக உள்ள வாக்குச்சாவடி இடிந்துவிழுந்த 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ராஜகனப்பன் மற்றும் அதிமுக சார்பில் கீர்த்திகா முனுசாமி ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


இதுஒருபுரம் இருக்க விருதுநகர் தொகுதியில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் அது பாஜகவிற்கு பதிவாகுவதாக புகார் எழுந்துள்ளது. விருதுநகரில் பாஜக சார்பில் ஜி.பாண்டுரங்கன் மற்றும் திமுக சார்பில் ஏ.ஆர்.ஆர். ஸ்ரீனிவாசன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.