விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைச் சந்தித்து வரும் அ.தி.மு.க.வின் வேட்பாளர் இந்த தேர்தலில் யார? என்று பெரும் எதிர்பாரப்பு மக்கள் மத்தியில் இருந்தது.


தேர்தலை புறக்கணித்துள்ளதா அ.தி.மு.க.?


ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், அ.தி.மு.க. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதா? என்று பார்க்கலாம்.


அ.தி.மு.க. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி வகித்தபோது, 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க.வினர் இடைத்தேர்தலில் அராஜகம் செய்வதாக கூறி அந்த தேர்தல்களை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அதேபோல, அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் புறக்கணிப்பாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:


இந்த சூழலில், ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. அராஜகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க.வினர் அதேபோல, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தி.மு.க. செயல்படுவார்கள் என்று குற்றம் சாட்டியிருப்பதுடன் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டள்ள நிர்வாக திறனற்ற தி.மு.க. அரசில் நடக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் கோட்டைவிட்ட அ.தி.மு.க., சில தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன், சில தொகுதிகளில் 2வது இடத்தை பா.ஜ.க. கூட்டணியிடம் பறிகொடுத்தது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலே இலக்கு என்றும் அ.தி.மு.க. அறிவித்துள்ளது. இந்த சூழலில், தொடர் தோல்வியை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!


மேலும் படிக்க: Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்