Actor Benjamin: 'எம்ஜிஆரை போன்று விஜய்யும் நிச்சயம் அரசியலில் வெற்றி பெறுவார்' - நடிகர் பெஞ்சமின்

விஜய் என்ன நினைக்கிறாரோ அதை செய்து முடிப்பார், பின் வாங்க மாட்டார். சினிமாவில் எப்படி வெற்றி பெற்றாரோ அதேபோன்று அரசியலிலும் கொடிகட்டி பறப்பார் என்றும் கூறினார்.

Continues below advertisement

சேலம் மாநகர் கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேலம் மாநகர சுடுகாடுகள், இடுகாடுகள் மற்றும் மின் மயானங்களில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வடை, பாயசத்துடன் சமபந்தி விருந்தை நடிகர் பெஞ்சமின் தலைமையிலான குழுவினர் செய்தார்.

Continues below advertisement

இதைத் தொடர்ந்து, நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, "சுடுகாடுகளில், இடுகாடுகளில் மின் மயானங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களை நாம் யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்கள் நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டிருக்கமாட்டார்கள். அதனை கருத்தில் கொண்டு இன்று சேலம் மாநகர சுடுகாடுகள் பணி ஆற்றுவதற்கு வடபழத்துடன் சமபந்தி விருந்து நடத்தியுள்ளோம். இதனை போல் தமிழக முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் சமூக அக்கறை கொண்டவர் சுடுகாட்டு தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

நடிகர் விஜய் கட்சி துவக்கி கொடியை அறிமுகம் செய்துள்ளார். விஜய் என்ன நினைத்தாரோ அதை நிச்சயம் செய்து முடிப்பார். அதிகம் பேசமாட்டார் ஆனால் செயலில் காட்டுவார். அவரின் மனநிலை என்னவென்று எனக்குத் தெரியும். ஒரு விஷயத்தை நினைத்தால் அதிலிருந்து பின்வாங்கமாட்டார். அரசியல் வருவதற்கு முன்பாக நன்றாக சிந்தித்து விட்டு வந்துள்ளார். அதில் உறுதியாக இருக்கிறார். சினிமாவில் இமயம் தொட்டது போல் அரசியலிலும் வெற்றி பெறுவார். இன்று சினிமாவில் அதிக சம்பளம் 200 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரை வாங்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்ற அவர் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கியுள்ளார். அவருக்கு பின்பலம் இருக்கிறது. அது தமிழக மக்கள் தான் அவருக்கு பின்பலம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் நடிகனாக இல்லாமல் சேலத்தைச் சார்ந்த சாதாரண மக்கள் பதிலாக நான் இதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். நடிகர் விஜய் கட்சி கொடி அறிமுகப்படுத்திய நிலையில் தமிழகத்தில் மட்டும்தான், இதுபோன்ற எதிர்ப்புகள் வருகிறது. பிற நாட்டிலேயே, மாநிலங்களில் இல்லை. மேலும் சினிமாவில் எப்படி வெற்றி பெற்றாரோ அதேபோன்று அரசியலிலும் கொடிகட்டி பறப்பார். சின்ன குழந்தைகளின் மனதை யார் பிடிக்கிறார்களோ அவர்கள் ஜெயிப்பார்கள். அதேபோன்று எம்ஜிஆர் பிடித்து வெற்றி பெற்றார். இப்பொழுது விஜய் பிடித்துள்ளார். எம்ஜிஆரை போன்று நிச்சயம் விஜய்யும் அரசியலிலும் வெற்றி பெறுவார் என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola