TVK Vijay: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தங்களது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.


தவெக மாநில மாநாடு:


நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. காலை முதலே குவியத்தொடங்கிய பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில், அக்கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்கள் ஆகியவை பிரகடனப்படுத்தப்பட்டன. அதைதொடர்ந்து இறுதியாக பேசிய விஜய் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? தனது இலக்கு என்ன? தனது அரசியல் எதிரிகள் யார்? தங்கள் முன் இருக்கும் சவால்கள் என்ன? முன் வைக்கப்படும் விமர்சனங்கள்  பற்றி எல்லாம் விரிவாகவும், ஆக்ரோஷமாகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பேசினார். அதுதொடர்பான காணொலிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. 


தீயாய் பரவும் விஜயின் பேச்சு: