சிங்கம் எப்போதும் வேட்டைக்குத்தான் வெளியே வரும்; வேடிக்கை பார்க்க அல்ல. அதேபோல சிங்கம் எப்போதும் தனக்கு இணையான அல்லது தன்னை விடப்பெரிய மிருகங்களை மட்டுமே வேட்டையாடும் என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை மாவட்டம், பாரபத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் பேசியதாவது:
’’வீரம் விளையும் மதுரை மாமண்ணை வணங்குகிறேன். காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். ஆனால் சிங்கம் ஒன்றுதான். அது தனித்துவம் மிக்கது. சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரத்துக்கு அதிரும்.
சிங்கம் வேட்டைக்குத்தான் வெளியே வரும்
சிங்கம் எப்போதும் வேட்டைக்குத்தான் வெளியே வரும்; வேடிக்கை பார்க்க அல்ல. அதேபோல சிங்கம் எப்போதும் தனக்கு இணையான அல்லது தன்னை விடப்பெரிய மிருகங்களை மட்டுமே வேட்டையாடும்.
1967, 1977-ல் நடந்த அரசியல் மாற்றம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நடக்கும். இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். இந்தியாவின் வெகுஜன மக்கள் படை இந்தக் கூட்டம்’’.
இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.
விமர்சனங்களுக்கு பதிலளித்த விஜய்
தவெக தலைவர் விஜய், பொதுவெளிக்கு வரவில்லை, செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் இவ்வாறு தெரிவித்துள்ளார்.