தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு கற்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்ட நிலையிலும், மதுரையை சேர்ந்த தவெக தொண்டர்கள் கைக்குழந்தைகளுடன் மாநாட்டிற்கு வருவது பேசு பொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்தா ஆண்டு தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய், தவெக கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பல லட்சம் தவெக தொண்டர்கள் மத்தியில் வெற்றிக்கரமாக நடத்தி முடித்தார். அதை தொடர்ந்து இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மதுரை அருகே பாரபத்தியில் 506 ஏக்கர் நிலத்தில் மாநாட்டிற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று மாநாடு நடைபெற உள்ளது.
விஜய் வைத்த கோரிக்கை
ஆனால் இந்த மாநாட்டில் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் வைத்துள்ள பெண்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் இதய, சுவாச பிரச்சினை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும், அவர்கள் வீட்டில் இருந்தே மாநாட்டை டிவியில் காண வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார்.
மாநாட்டில் பெண்கள் குழந்தைகள்
ஆனால் விஜய்யின் வேண்டுகோளை மீறி குழந்தைகளுடன் மாநாட்டில் பங்கேற்க காலையிலேயே மாநாட்டு திடலுக்கு வந்தனர். மாநாட்டிற்கு கற்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்ட நிலையிலும், மதுரையை சேர்ந்த தவெக தொண்டர்கள் கைக்குழந்தைகளுடன் மாநாட்டில் பங்கேற்றவர்களை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பவுன்சர்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை திடலில் இருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.
தயார் நிலையில் மருத்துவ குழு:
அதே போல மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்கள் பலர் அதிக வெப்பத்தினால் மயக்கமடைந்தனர், அவர்களை உடனடியாக மீட்டு குளுகோஸ், மற்றும் ஒ.ஆர்,எஸ் போன்ற நீர் சத்தை அதிகரிக்கும் திரவங்களை தவெக சார்பில் மருத்துவக்குழுவினர் வழங்கி வருகின்றனர்.
தவெக மாநாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள 600 பேர் கொண்ட மருத்துவ க குழுவில் 250 மருத்துவர்கள் மற்றும் 250 செவிலியர்கள் செயல்படுவார்கள்.
மாநாட்டு மருத்துவ குழு பொறுப்பாளர் பிரபு தெரிவித்திருந்தார்.